‘நான் பார்த்தெல்லாம் சாப்பிடற ஓநாய் இல்லை, பசிச்சா மட்டும் வேட்டையாடுற ‘சிங்கம்’; ‘எஸ் 3’ சூர்யா

November 7, 2016 1:00 pm
‘நான் பார்த்தெல்லாம் சாப்பிடற ஓநாய் இல்லை, பசிச்சா மட்டும் வேட்டையாடுற  ‘சிங்கம்’; ‘எஸ் 3’ சூர்யா

சூர்யா நடித்து, ஹரி இயக்கியுள்ள படம் எஸ்-3 சிங்கம் படத்தின் 3வது பாகமாக உருவாகியுள்ளது. இதில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ராதாரவி, நாசர், விவேக், ரோபா சங்கர், சூரி, கிரிஷ் உள்ளிட்டவர்கள் நடித்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘எஸ் 3’ திரைப்படம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் 1 நிமிடம் 23 வினாடிகள் கொண்ட அதகளம் பண்ணும் டீசர் சற்று முன் வெளியாகி இணையத்தை மிரட்டிக்கொண்டிருக்கிறது.

அஜித் நடித்த வேதாளம் டீசரில் ‘கண்ணாம்பூச்சி ரே ரே’ என்ற பாடலும், விஜய் நடித்த ‘தெறி’ டீசரில் ‘டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ என்ற பாடலும் இருந்தது போல் ‘எஸ் 3’ பட டீசரில் ”ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்” என்ற எம்ஜிஆரின் பாடல் வரியுடன் ஆக்ரோஷமாகவும், பிரமாண்டமாகவும் தொடங்குகிறது.

டீஸர் முழுக்க ஆக்ரோஷமாக பேசி கண் முன்னே பல முகபாவங்களை காட்டி ரசிகர்களை மிரள வைத்து இருக்கிறார் சூர்யா. படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டு படப்பிடிப்பு என்பதால் டீசர் பயங்கர ரிச் ஆக உள்ளது. விமானம், கார் ரேஸ், ரயில் என வாகங்களின் வேகம் கிறுகிறுக்க வைக்கின்றது. டீசர் முழுவதுமே சூர்யா விரைப்பாகவும் கம்பீரமாகவும் தோன்றுவதால் ஆக்சனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது.

”நான் பார்த்தெல்லாம் சாப்பிடற ஓநாய் இல்லை”, பசிச்சா மட்டும் வேட்டையாடுற சிங்கம். இப்ப கொலைப்பசியில் இருக்கேன்’ எது கிடைச்சாலும் வேட்டையாடனுங்கிற வெறியில இருக்கேன். எதிர்ல எவன் வந்தாலும் ஏறி மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பேன் என்ற சூர்யாவின் ஆங்காரமான வசனம் வில்லன்களை மட்டுமல்ல, பார்வையாளர்களையும் திடுக்கிட வைக்கின்றது.

அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி ஆகியோர் ஓரிண்டு ஷாட்களில் மட்டுமே வருவதால் அவர்களுடைய கேரக்டர் குறித்து இந்த டீசரில் விளங்க முடியவில்லை. இருப்பினும் ஆக்சன் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் ஒரு படமாக ‘எஸ் 3’ இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media