டேய் என்னை ட்விட்டர்ல நிம்மதியா இருக்க விடுடா சிறுவனின் மரண களாய்க்கு ஆளான சித்தார்த்

February 9, 2016 10:43 am
டேய் என்னை ட்விட்டர்ல நிம்மதியா இருக்க விடுடா சிறுவனின் மரண களாய்க்கு ஆளான சித்தார்த்

புதுமுக இயக்குனர் தீரஜ் இயக்கத்தில் நடிக்கு சித்தார்த் தனது நடிப்பில் 12 ம் தேதி வெளியாகும் ஜில் ஜங் ஜக் திரைப்படத்தின் புதுவித புரோமோஷன் ஒன்றை வீடியோ வடிவில் வெளியிட்டிருக்கிறார்….அந்த வீடியோவில் ஒரு சிறுவன் ஜில் ஜங் ஜக் கமர்ஷியல் படமா? என்று கேட்டு கமர்ஷியல் படம் பற்றி சித்தார்த்துக்கு விளக்கம் கொடுக்கிறான். இணையத்தில் பலரையும் கவந்துள்ளது.

அந்த வீடியோவில் ஒரு சிறுவன் சித்தார்த்தின் “ஜில் ஜங் ஜக்” கமர்ஷியல் படமா? என்று கேட்க அதற்கு அவர் இயக்குநர் தீரஜ் வைத்திக்கு போன் செய்து இது கமர்ஷியல் படம் தான் என்று கூறுகிறார்.

சிறுவன்; உங்க படத்துல சந்தானம், பரோட்டா சூரி இருக்காங்களா ? சித்தார்த்; இல்லை

சிறுவன் ; சரி ஹீரோவும், காமெடியனும் சேர்ந்து கம்பெனி திறப்பாங்களா ?

சித்தார்த்; இல்லை

வாய்ஸ்; சமுத்திரக்கனி அட்வைஸ் இதெல்லாம் இல்லையா அப்போ படம் ஓடுறதுக்கு வாய்ப்பே இல்லை என்று சித்தார்த்தை பதட்டப்பட வைக்கிறான்.

சிறுவன்; சரி படத்துல அடிக்கடி தல, தலன்னு பேர் சொல்வீங்களா அப்பத்தான் ஆடியன்ஸ் கைதட்டல் கிடைக்கும். ஒரு பாட்டுல ….

சித்தார்த்; பிரதர் அது 2020 ல நடக்கும் கதை.

சிறுவன்; ஆனால் அப்போ அவர் சிஎம் ஆகிடுவாரு என்று சித்தார்த்துக்கு மீண்டும் சிறுவன் பல்பு கொடுக்கிறான். டேய் என்னை ட்விட்டர்ல நிம்மதியா இருக்க விடுடா என பதட்டமடைகிறார் சித்தார்த்.

சிறுவன்; படத்துல பேய், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ் இவங்களாவது இருக்காங்களா?. பன்ச் டயலாக், இளையராஜா பாட்டு, ஹீரோயின் இது எதுவுமே இல்லாம என்ன கமர்ஷியல் படமா?.

சிறுவன் அதுக்கு நான் அரண்மனை 2 படமே பார்த்துடுவேன் என்று சிறுவன் ஜூட் விட சித்தார்த்& கோ ஷாக்காகி நிற்கிறது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media