கோயம்பேட்டில் ஒரே நாளில் 150 கோடிக்கு பழங்கள் விற்பனை

கோயம்பேட்டில் ஒரே நாளில் 150 கோடிக்கு பழங்கள் விற்பனை

சென்னை:விநாயகர் சதுர்த்தியை ஓட்டி கோயம்பேட்டில் சிறப்பு சந்தை திறக்கப்பட்டது.இதில் ஓரே நாளில் 150 கோடி ரூபாய்க்கு பழங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

koyambedu

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 200க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வருகின்றன.இங்கிருந்து பல மாவட்டங்களுக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி இரண்டு நாட்களாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் தலா 250 லாரிகளுக்கு மேல் வந்தன. காய்கறிகள் மொத்த விற்பனை அதிகாலை நான்கு மணிக்கு தொடங்கி, பகல் பன்னிரண்டு மணி வரையும் பழங்கள் விற்பனை மாலை வரையும் நீடித்தது. பல மாவட்டங்களில் இருந்தும் வந்த மொத்த வியாபாரிகள் இவற்றை வாங்கி சென்றனர். மேலும் சென்னை நகர மக்களும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அமைப்பினரும் வாங்கிச் சென்றனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் ரூபாய் 150 கோடிக்கு மேல் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை நடந்ததால், கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காய்கறி, பழங்கள், பூக்களின் விலையேற்றம் அதிகரித்துள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்றாலும் முக்கிய தேவை என்பதால் சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் அதிக விலை கொடுத்தே பொருட்களை வாங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media