அமெரிக்க பொருளாதாரம் 3.5% உயர்வு..!

December 24, 2016 7:45 am
அமெரிக்க பொருளாதாரம் 3.5% உயர்வு..!

அமெரிக்க பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் 3.5 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இது கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகபட்ச வளர்ச்சி என்றும் investing.com தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் (ஜூலை -செப்டம்பர்) 3.2 சதவிகித வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்பட அதிகமான முதலீடு, நுகர்வோர் செலவீனம் அதிகரிப்பு வேலைவாய்ப்பினால் அதிகரித்து வரும் லாபம் ஆகிய காரணிகளால் அமெரிக்க பொருளாதாரம் 3.5 சதவிகிதம் வரையில் உயர்வடைந்துள்ளது. இந்த வளர்ச்சி நுகர்வோர், வணிக முதலீடு மற்றும் அரசு துறையை மேலும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் காலாண்டில் அடைந்த 0.8 சதவிகித மந்தமான வளர்ச்சியை தொடர்ந்து, இரண்டாம் காலண்டில் 1.8 சதவிகித வளர்ச்சி கிடைத்தது. இந்நிலையில் தற்போது மூன்றாம் காலாண்டில் 3.5 சதவிகித வளர்ச்சி பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, அக்டோபர் – டிசம்பர் வரையிலான கடைசிக் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 1.5 சதவிகிதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருடாந்திர அளவிலான பொருளாதார வளர்ச்சி கடந்த 2015ஆம் ஆண்டில் 2.6 சதவிகிதமாக இருந்தது. நடப்பாண்டின் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 1930ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா சந்திக்கும் குறைந்தபட்ச வளர்ச்சி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media