உயர்தர கேம்கள்! முன்னனி நிறுவனங்கள் இணைகிறது..!

உயர்தர கேம்கள்! முன்னனி நிறுவனங்கள் இணைகிறது..!

சீனாவின் 9APPS நிறுவனம் முன்னணி கேம் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் கேம் தயாரிப்பு நிறுவனமான GAMELOFT உடன் இணைந்துள்ளது.

இரண்டு நிறுவனங்களும் தனித்தனி தளங்களில் இதுவரை கேம் தயாரிப்பினை மேற்கொண்டிருந்தனர். உயர்தரமான டிஜிட்டல் கேம் தயாரிப்பில் GAMELOFT நிறுவனமும், நடுத்தரமான சாதாரண கேம் தயாரிப்பில் 9APPS நிறுவனமும் பணியாற்றி வந்தது.

GAMELOFT நிறுவனம் இதுவரை Asphalt Nitro, Real Football 2016 போன்ற பெரிய அளவிலான டிஜிட்டல் கேம்களையும், 9APPS நிறுவனம் TRUCK DRIVING 3D , ROBOTS WAR 3D போன்ற சிறிய கேம்களையும் தயாரித்துள்ளன.

9APPSஇன் கேம்கள் மாதத்திற்கு 250 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்றும் , தினம் 26 மில்லியன் கேம்கள் பதிவிறக்கம் செய்யப்படுகின்றன என்றும் அதன் தலைமை அதிகாரி தெரிவித்தார். மேலும் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனத்துடன் இணைவதால் பெரும் அளவிலான கேம்கள் புதிய முறையில் தயாரிக்கப்படும் என்றும் அவர் தகவல் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media