வீடியோ விவகாரம்: ஆம் ஆத்மி எம்.பி. தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!

வீடியோ விவகாரம்: ஆம் ஆத்மி எம்.பி. தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!

நாடாளுமன்றப் பாதுகாப்பு நடைமுறைகளை வீடியோ எடுத்து வெளியிட்ட ஆம் ஆத்மி எம்.பி. தவறு செய்தது நிரூபிக்கப்பட்டதால் குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு குளறுபடிகள ஆம் ஆத்மி கட்சி எம்.பி. பகவந்த்மான். இவர் பஞ்சாப் மாநிலம் சங்ரூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் நாடாளுமன்றத்துக்கு சென்றபோது, நாடாளுமன்றப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். அதில் போலீஸாரின் பாதுகாப்பு குளறுபடிகள் இடம் பெற்று இருந்தன.

கடும் கண்டனம்  இந்த வீடியோ நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் புயலை கிளப்பியது. நாடாளுமன்றப் பாதுகாப்பை படம் பிடித்து வெளியிட்டதற்கு எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் ஆம் ஆத்மி எம்.பிக்குக் கண்டனம் தெரிவித்தார். அதுகுறித்து தனது அறைக்கு வந்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.

9 பேர் குழு அதன்படி அங்கு சென்று எம்.பி. பகவந்த்மான் விளக்கம் அளித்தார். அது தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று சபாநாயகர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்த அவரது வீடியோ குறித்து விசாரிக்க பாஜக எம்.பி. கீர்த்தி சோமையா தலைமையில் ஒன்பது பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்தார். விசாரணை முடியும் வரை பகவந்த்மான், நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்தார்.

கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் இந்நிலையில் ஆம் ஆத்மி எம்.பி. பகவந்த்மான் தவறு செய்திருப்பது நாடாளுமன்றக் குழு நடத்திய விசாரணையில் உறுதி ஆனது. அதையடுத்து, நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் பகவந்த்மானை நாடாளுமன்றக் குழு நீக்கம் செய்தது. இதனால், குளிர்காலக் கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்களில் அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க முடியாது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media