பயத்தைப் பார்த்து நம்ம ஓடக் கூடாது, பயம் தான் நம்மைப் பார்த்து ஓடணும்; ‘அச்சம் என்பது மடமையடா’

பயத்தைப் பார்த்து நம்ம ஓடக் கூடாது, பயம் தான் நம்மைப் பார்த்து ஓடணும்; ‘அச்சம் என்பது மடமையடா’

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்கு பின் சிம்பு – கௌதம் கூட்டணி, ஏ.ஆர்.ரகுமான் இசை என அச்சம் என்பது மடமையடா படத்துக்கு பல வகைகளில் எதிர்பார்ப்பை எல்லாம் பூர்த்தி செய்ததா என்றால் எல்லோரும் கோரஸாக “யெஸ்” என கை தூக்குகிறார்கள். குறிப்பாக சிம்பு ரசிகர்கள் மட்டுமல்லாது படம்பார்த்த எல்லாருமே சொல்வது இதுதான், “சிம்பு இஸ் பேக்”. பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும் பின்னணி இசையும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்கிறது. அங்கங்கே சில குறைகள் இருந்தாலும் ஆகமொத்தத்தில் விடிவிக்கு பிறகு சிம்பு – கௌதம் கூட்டணி மீண்டும் சொல்லியடித்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.

‘சிம்பு இஸ் கம்பேக் வித் ஸ்டைலிஷ் லுக்’ என்று சொல்ல வேண்டும், ஆரம்பத்தில் விடிவி கார்த்திக் போல் கையை ஆட்டுவது, தலையை ஆட்டுவது என இருந்தாலும், பொறுப்பு என்று வந்தவுடன் அவரிடம் வரும் முதிர்ச்சி நடிப்பிலும் நன்றாக தெரிகிறது. ப்ளீஸ் இதே மாதிரி படங்களை தேர்ந்தெடுத்து நடிங்க சிம்பு. மஞ்சிமா தமிழுக்கு புதுசு, அவரை வைத்து தான் கதையே நகர்கிறது, அதை அவரும் உணர்ந்து பிச்சு உதறுகிறார்.

manjima-mohan

சிம்பு படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். கிட்டத்தட்ட விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் போல, சிம்பு தங்கையின் தோழியாக மஞ்சிமா, சிம்புவின் வீட்டிலேயே தங்கி படிக்கிறார், பிறகு சொல்லவா வேண்டும்? லவ், அலப்பறை என ஜாலியாக கூத்துக்கு பிறகு சிம்பு ஒரு ரோட் ட்ரிப் செல்ல, அவருடன் மஞ்சிமாவும் செல்கிறார். ஜாலியாக இவர்கள் ட்ரிப் போக ஒரு லாரி இவர்கள் மீது மோத, சிம்புவின் வாழ்க்கையே தலைகீழாகிறது. பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரசியமாக காட்டியிருக்கிறார் கௌதம் மேனன். ‘பயத்தைப் பார்த்து நம்ம ஓடக் கூடாது. பயம் தான் நம்மைப் பார்த்து ஓட வேண்டும்” என்கிற வார்த்தைத் தான் இக்கதையின் ஆரம்பப் புள்ளி’. இதுவரை கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் தான் கமர்ஷியல் பாணியில் அமைந்திருக்கிறது.

இந்த படத்தில் ஒரு புதுமை உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் என்றால் முதல் பாதியில் இரண்டு அல்லது மூன்று பாடல்களும் இரண்டாவது பாதியில் மீதி பாடல்களும் இருக்கும். ஆனால் இந்த படத்தில் முதல்முறையாக ஐந்து பாடல்களும் முதல் பாதியிலேயே உள்ளதாம். முதல் பாதியில் காதலை அவ்வளவு அழகாக தந்துள்ளார். 5 பாடல்கள் வந்தாலும் அனைத்தும் அருமை கௌதம் மேனன் ஹாஸம். ஆழமிகு அமைந்த கண்ணதாசனின் வரிகள் போல் சுவையூட்டும் இரண்டாவது பாதி. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பகுதி என்பதால் படத்தின் விறுவிறுப்பு குறையாமல் இருக்க இரண்டாவது பாதியில் பாடல்களே இல்லை என்று கூறப்படுகிறது. எனவே முதல் பாதி 70 நிமிடங்களும் செம ரொமான்ஸ் காட்சிகளும் இரண்டாவது பாதி 65 நிமிடங்களும் விறுவிறுப்பான ஆக்ஷன் தர்பார்களும் நிறைந்த காட்சிகளாக செல்கிறது.

aym-2

கௌதம் படம் என்றாலே காதல், பிறகு ஆக்‌ஷன் என்பது தெரியும். ஆனால், நமக்கு ஆக்‌ஷன் என்ற ஐடியாவே இல்லாத போது நம்மை நோக்கி ஒரு குண்டு வந்தால் என்ன செய்வோம்? என்பதை இரண்டாம் பாதியில் பதட்ட பட வைத்துள்ளார். கொஞ்சம் அவருடைய கமர்ஷியல் எல்லையை மீறியுள்ளார். குறிப்பாக சிம்புவின் பெயரை கிளைமேக்ஸில் சொல்லும் காட்சி தியேட்டரே அதிர்கிறது. சட்டை காலருக்கும், முடிக்கும் இடையில என்னமோ பண்ணுதுன்ற காதல் வசனமாக இருந்தாலும் சரி, ‘லைப்ல என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அதுக்கு நம்ம ரெடியா இருக்கோமான்னு தான் கேள்வி’ என்ற வசனமும் சரி கௌதம் யுவர் கிரேட். படத்தின் இரண்டாவது ஹீரோ ஏ.ஆர். ரகுமான். பாடல்களிலும் சரி, பின்னணியிலும் சரி செம்ம ஸ்கோர் செய்துவிட்டார். ஒளிப்பதிவு நாமே ஒரு ட்ரிப் சென்ற அனுபவம்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media