ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு களத்தில் குதித்த தனுஷ்..!!

January 11, 2017 11:25 am
ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு களத்தில் குதித்த தனுஷ்..!!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை இந்த வருடம் நடத்தியே தீரவேண்டும் என்கிற முனைப்புடன் ஒட்டுமொத்த தமிழர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்த போரட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன், சூர்யா, சிம்பு, சிவகர்த்திகேயன் போன்றோர் ட்விட்டர் மூலம் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

இதே போலஹிப் ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ், அருண்ராஜ் காமராஜ் போன்றோர் ஜல்லிக்கட்டுக்கு  தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த ஜல்லிக்கட்டு களத்தில் தனுஷூம் குதித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உணர்வுப்பூர்வமான விஷயங்களோடு கலந்த ஒன்று என்றும். இது வீரத்தமிழர்களின் அடையாளம். எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும்’ என்று வீரமாக தனுஷ் ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.

ஒட்டு மொத்த நடிகர்கள் ஜல்லிகட்டுக்கு தற்போது தங்களுடைய ஆதரவை கொடுத்து வருவதால் மேலும் உற்சாகம் அடைந்துள்ளனர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media