தங்கமீன்களுக்குப் பிறகு நா.முத்துக்குமாருக்கு ராம்-யுவன் கொடுக்கும் பரிசு!

December 30, 2016 6:09 am
தங்கமீன்களுக்குப் பிறகு நா.முத்துக்குமாருக்கு ராம்-யுவன் கொடுக்கும் பரிசு!

தங்கமீன்களுக்குப் பிறகு இயக்குநர் ராமின் அடுத்த படமான தரமணிக்கான காத்திருப்பு மூன்று வருடங்களாக நீண்டிருக்கிறது. அந்த காத்திருப்பு தற்போது முடிவிற்கு வந்துள்ளது. படத்தின் பாடல்கள் நாளை 30.12.16 வெளியிடப்படவிருக்கின்றன. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள தரமணி படத்தின் பாடல்களை ரஜினிகாந்த் வெளியிடுகிறார்.

இந்நிலையில் படத்தின் அனைத்து பாடல்களையும் வெளியிடுவதற்கு முன்பாக ஃப்ரம் த பாட்டம் ஆஃப் அவர் ஹார்ட்ஸ் (From The Bottom Of Our Hearts)என்ற ஒரு பாடலை மட்டும் யூடியூப்பில் ரிலீஸ் செய்துள்ளனர் படக்குழுவினர். பாடல் என்று சொல்ல முடியாத வகையில், 2 நிமிடம் 34 விநாடிகள் ஓடும் தீம் மியூசிக்குக்கு இடையே இயக்குநர் ராமும், யுவன்சங்கர் ராஜாவும் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரைப் பற்றி பேசுகின்றனர். நா.முத்துக்குமாரின் எழுத்துப் பயணத்தை பற்றியும், அவருக்கும் தங்களுக்குமான உறவுகளைப் பற்றியும் பேசுகின்றனர்.

தரமணியின் ஆல்பம் நா.முத்துக்குமாருக்கு காணிக்கை செய்யப்படுகிறது என்று கூறுவதுடன் இந்த 2 நிமிட காணொளி முடிவடைகிறது. காணொளி முழுவதும் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. எப்போதும் ராமின் படங்களுக்கு நா.முத்துக்குமார்தான் பாடல்கள் எழுதி வந்த நிலையில் அவரது இறப்ப்புக்குபின் வரும் பாடல்கள் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media