55 நாடுகளில் வெளியாகும் பைரவாவின் மெகா சாதனை!

55 நாடுகளில் வெளியாகும் பைரவாவின் மெகா சாதனை!

விஜய் கீர்திசுரேஷ் சதீஷ் டேனியல் பாலாஜி ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் பரதன் இயக்கத்தில் வெளியாகும் படம் பைரவா இந்த படம் ஆரம்பித்ததிலிருந்து பல சாதனைகை புரிந்து வருகிறது இது நாம் அறிந்த விஷயம் டிசர் முதல் படத்தின் பாடல்கள் ட்ரைலர் இவை அனைத்தும் யுடுப் யில் மிக பெரிய சாதனைகள் புரிந்து வருகிறது.

இப்படம் வெளிவர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பைரவா பெரிய அளவில் வெளிவரவுள்ளது. வழக்கமாக வெளிவரும் நாடுகளோடு சேர்த்து தற்போது சில புதிய நாடுகளிலும் பைரவா வெளிவரவுள்ளது.

நைஜீரியா, கானா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளோடு சேர்த்து மொத்தம் 55 நாடுகளில் பைரவா வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது. இந்த படத்தின் உச்சகட்ட சாதனையாக உலகத்தின் இருக்கும் எல்லா நாடுகளில் முக்கியமாக ஆப்பிரிக்கா நாடுகளில் வெளியாகும் தமிழ் படம் என்ற பெருமையை சேருகிறது.

மேலும்,  ஜேர்மன் போன்ற நாடுகளில் வெளியாகாத இடங்களிலும் ‘பைரவா’ வெளியாகி சாதனை புரிகிறது என்பது பெருமையான விஷயம் இது தமிழுக்கும் தமிழ் சினிமாவுக்கும் விஜய் வாங்கி தரும் பெருமை என்று தான் சொல்லணும் . இந்த படத்தை உலகத்தில் 55 நாடுகளில் மட்டும் A&P groups வெளியிடுவது மேலும் பெருமை. இதன் மூலம், நாடுகள் எண்ணிக்கையில் பைரவா புதிய சாதனை படைத்துள்ளது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media