டோனி,விராட் கோலி, சச்சினை பின்னுக்கு தள்ளிய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து..!!

December 25, 2016 7:37 am
டோனி,விராட் கோலி, சச்சினை பின்னுக்கு தள்ளிய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து..!!

டெல்லி : 2016-ம் ஆண்டின் கூகுள் தேடலில் அதிகமாக தேடப்பட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பிவி சிந்து முதலிடம் பிடித்து உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பிவி சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியிலும் முதல் முறையாக வெள்ளிப்பதக்கம் வென்றவரும் பிவி சிந்துதான். பிவி சிந்து,M .S .டோனி, விராட் கோலி மற்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரை முந்தி உள்ளார் தேடப்பட்டவர்கள் பட்டியலில்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஃப்ரீஸ்டைல் 58 கிலோ எடைப் பிரிவு வெண்கலப் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக், ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற திரிபுராவை சேர்ந்த 23 வயதான தீபா கர்மாகர் (ரியோ ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடம் பிடித்து பதக்கத்தை நழுவ விட்டார்) ஆகியோரும் இந்தியாவில் இருந்து கூகுள் இணையத்தில் தேடப்பட்டவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்து உள்ளனர்.

முதல் பத்து இடங்களில் டோனி, கோலி, சச்சின் தெண்டுல்கர், பேட்மிண்டன் வீரர் கிதாம்ப்ரி ஸ்ரீகாந்த் மற்றும் டென்னிஸ் சூப்பர்ஸ்டார் சானியா மிர்சா ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

ஒட்டுமொத்த தேடலில் பிவி சிந்து இரண்டாவது இடம் பிடித்து உள்ளார், முதல் இடத்தை அமெரிக்க தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்டு டிரம்ப் பிடித்து உள்ளார்.

பிவி சிந்து நவம்பர் மாதம் நடைபெற்ற சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டனில் ‘உள்ளூர் புயல்’ சன் யுவை அடக்கி பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். கவுரவமிக்க சூப்பர் சீரிஸ் பட்டம் முதல் முறையாக சிந்துவிற்கு கிடைத்தது.

இதன்பின்னர் நடைபெற்ற ஹாங்காங் ஓபன் மற்றும் உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகளில் அரையிறுதி வரையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் பிவி சிந்து.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media