அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வல்லமை வாய்ந்த அக்னி-IV ஏவுகணை சோதனை வெற்றி!

அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வல்லமை வாய்ந்த அக்னி-IV ஏவுகணை சோதனை வெற்றி!

புவனேஷ்வர் : இந்தியா இன்று அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் வல்லமை வாய்ந்த அக்னி-IV ஏவுகணையை ஒதிஷா கடற்கரையில் வெற்றிகரமாக சோதனை செய்தது.

தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட அக்னி-IV ஏவுகணையயானது 20 மேட்டர் நீளமும், 17 டன் எடையும் கொண்டது. நீர்பகுதியில் இருந்து சென்று நிலப்பகுதியில் ஊழல் இலக்குகளை தாக்கும் வகையில் இது வடிவைமைக் கப்பட்டிருக்கிறது. தன்னுடைய முனை பகுதியில் 1 டன் எடை கொண்ட அணு ஆயுதத்தை தாங்கிக் கொண்டு 4000 கி.மீ வரை பறந்துசென்று எதிரி இலக்குகளை தாக்கி அளிக்கும் வல்லமை இதற்கு உள்ளது.

இந்த ஏவுகணையானது ஒதிஷா கடற்கரையில் உள்ள அப்துல் காலம் தீவில் இருந்து நடமாடும் ஏவுதளம் ஒன்றின் மூலம் செலுத்தப்பட்டது. காலை சரியாக 11.50 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது.

அக்னி ஏவுகணை வரிசையில் இது ஆறாவது ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media