பிராவோவின் கிரிக்கெட் எதிர்காலம் என்னாகும்?

December 30, 2016 6:45 am
பிராவோவின் கிரிக்கெட் எதிர்காலம் என்னாகும்?

இந்த ஆண்டுக்கான பிக் பேஷ் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியை எதிர்த்து பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. ஆட்டத்தின் 11 ஓவரை பிராட் ஹாக் வீசிய பந்தை பெர்த் அணியின் மைக்கெல் கிளிஞ்சர் பவுண்டரிக்கு அடித்தார்.

அப்போது பவுண்டரியை நோக்கி சென்று கொண்டிருந்த பந்தை பாய்ந்து தடுத்தார் வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் டிவைன் பிராவோ. பந்தை பவுண்டரியை தொடாமல் தடுத்த பிராவோவுக்கு காலில் பலமான காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டார்.

காலில் முறிவு ஏற்பட்டிருக்கலாம் என ஸ்கேன் எடுத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மேற்கொண்டு இத்தொடரில் விளையாடுவாரா? என்ற நோக்கில் கேள்விகள் எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media