சர்வதேச போட்டிகளில் இருந்து விலகும் அனா இவானோவிச்!

December 29, 2016 11:17 am
சர்வதேச போட்டிகளில் இருந்து விலகும் அனா இவானோவிச்!

செர்பியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான அனா இவனோவிச் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உயர்நிலையில் போட்டியிட இனி பொருந்தாது என்று அவர் கூறியுள்ளார்.எனவே ,சர்வதேச போட்டிகளில் இருந்து விலக இதுவே சரியான நேரம் என்று அனா இவனோவிச் குறிப்பிட்டுள்ளார்.

29 வயதான இவனோவிச், கடந்த 2008ம் ஆண்டில் உலகின் முதல்நிலை வீராங்கனையாக உயர்ந்தவர். மேலும் இவர் பிரெஞ்சு ஓபன் உள்ளிட்ட 15 மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார்.ரசிகர்களை ஈர்த்த வீராங்கனை என புகழ்பெற்ற இவனோவிச், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க ஓபன் போட்டியில் முதல் சுற்றிலேயே காயம் காரணமாக வெளியேறினார்.

பின்னர் 2014 ல் மீண்டும் விளையாட தொடங்கிய இவர் ,மீண்டும் சர்வதேச தர வரிசை பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்றார்.

தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இத்தனை நாளாக தனக்கு ஆதரவளித்த ரசிகர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இவனோவிச் குறிப்பிட்டுள்ளார்..

குழுசேர்

கருத்து கணிப்பு

How Is My Site?

View Results

Loading ... Loading ...

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares