சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்

சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்

ரொம்ப நாளுக்கு அப்புறம் நமக்கு நெருக்கமான ஃப்ரெண்டை பார்த்தா ஒரு ஃபீல் வரும். அதுக்கு உருவமெல்லாம் இருக்காதுன்னாலும் நல்லாருக்கும். அதுதான் சென்னை 28: செகண்ட் இன்னிங்ஸ் படம். அதே டீம். ஆனா சில பேர் மட்டும் இல்ல. எல்லாருக்கும் குடும்பம் இருக்கு, ஜெய், பிரேம்ஜி தவிர. கல்யாண வாழ்க்கைக்குள்ளே வந்தபிறகு நண்பர்கள், பார்ட்டி, கலாய்க்கிறது, ஊர் சுத்தறது, விளையாடறது … இதையெல்லாம் தியாகம் பண்ணிட்டு இருக்கற எல்லா அங்கிள்களுக்கும் இந்தப் படம் கண்டிப்பா ஓர் ஏக்கத்தை ஏற்படுத்தும்.

படத்தோட கதை ஜெய்க்கு கல்யாணம் ஆச்சா? இல்லையா? அந்த கல்யாணத்தை சுத்தி நடக்குற சம்பவங்கள்… அப்பறம் கிரிக்கெட்… இதுதான் நம்ம ‘சென்னை 28: செகண்ட் இன்னிங்ஸ்’. முதல் படத்துக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசத்தை பார்க்கலாம். ஃபர்ஸ்ட் பார்ட்ல இருந்த அளவுக்கு காமெடி இதுல இல்லைனாலும், பாட்டு அந்த அளவுக்கு ரீச் ஆகலன்னாலும் ஏதோ ஒன்னு நம்மள கட்டிப்போட்டு படம் பார்க்க வைக்குதுன்னா அது நட்பும், கிரிக்கெட்டும் தான்.

பத்து பேர் இருக்கற குரூப்ல ஒருத்தன் மட்டும் கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ணாம அடுத்தவன் உயிரை எடுக்கறதுன்னு… இப்படி எல்லாத்தையும் ரொம்ப இயல்பா கொஞ்சம் காமெடி கலந்து தந்த வெங்கட்டுக்கு பாராட்டுகள்.

சிவாதான் படத்துல டாப்பு, அந்த YouTube விமர்சன சீன்லாம் செம… இனி யாராவது விமர்சனம் பண்ணும்போதெல்லாம் இந்த படம் நிச்சயமா கண்ணு முன்னாடி வரும். யுவன் இசையில வைபவ்க்கு போட்ட BGM வேற லெவல். இன்னும் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு. எங்கே காமெடி வைக்கணும், யாரை மொக்கை பண்ணா, படம் பார்க்குறவங்களுக்கு எண்டர்டெயின்மெண்டா இருக்கும்னு பார்த்து பார்த்து எடுத்திருக்காரு வெங்கட்.

படத்துல கொஞ்சம் கிரிக்கெட், நெறைய ஃப்ரெண்ட்ஸ் பக்கங்கள். நாலு பேர் இருக்கற ஒரு குரூப்ல ஒருத்தனுக்கு பிரச்னைன்னா அதை எல்லாரோட பிரச்னையாவும் பார்த்து, எப்படி முடிக்கணும் தெரியாம முழுச்சிட்டு இருக்கும்போது… தானே ஒரு வழி பிறந்து பிரச்னை முடிவுக்கு வரும்ல… அப்போ ஒரு சந்தோஷம் கிடைக்கும் பாருங்க… அதான் சென்னை 28: செகண்ட் இன்னிங்ஸ்.

சரக்கைப் போட்டா, போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடாதீங்கன்னு டைரக்டர் சொல்றாரு! ஏன்னு படம் பார்த்து தெரிஞ்சிகோங்க. சொல்ல நிறைய விஷயம் இருக்கு…. பொய் தியேட்டர்ல பொய் பாருங்க என்ஜாய் பண்ணுங்க…

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media