சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவின் திரைப்படம்!

சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவின் திரைப்படம்!

14வது சென்னை சர்வதேச திரைப்பட விழா வருகிற ஜனவரி 5 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் திரையிடுவதற்கு 12 தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 

 

 

 

இந்த விழாவில், மறைந்த முதல்வர் மற்றும் முன்னாள் திரைக்கலைஞருமான ஜெ.ஜெயலலிதா அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக, அவரது இரண்டு திரைப்படங்களை திரையிட திட்டமிட்டுள்ளனர் விழா குழுவினர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘அடிமைப் பெண்’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய இரண்டு படங்களை திரையிடுவதாக CIFF அமைப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த இரு திரைப்படங்களையும் கேசினோ திரையரங்கில் திரையிடவுள்ளனர்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media