செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் : லயோலா கல்லூரி கருத்து கணிப்பில் தகவல்!|            |சாம்பலாக போகும் பூமியின் பல பகுதிகள்... கொடூரமான முறையில் அழியப்போகிறது மனித இனம்... அறிகுறிகள் தென்பட ஆரம்பம்..!|            |தொகுதிக்கு வரட்டும் வாய்லயே அடிக்கறோம்.. ஆத்திரம் முற்றிய அமைச்சர் வளர்மதி தொகுதி மக்கள்... ஆற்று மணலை திருடிக் கொண்டு ஊரைவிட்டே ஓடியது அம்பலம்.!|            |மும்பையில் இருக்கும் போதே முடிவு செய்து விட்டார்கள்... 'ஸ்கோர் போர்டை மட்டும் பார்த்து விடாதே' எச்சரித்த தோனி: அப்போது பாண்டியாவிற்கு நிகழ்ந்தது..?|            |எடப்பாடி தலைமையில் 4-வது அணியா..? கண்ணாடி போன்று உடையும் அதிமுக..! ஒன்றாக ஒட்ட வாய்ப்பே இல்லையாம்..!!

Dunkrik – கிறிஸ்டோஃபர் நோலன் வீசிய குண்டு!

Dunkrik – கிறிஸ்டோஃபர் நோலன் வீசிய குண்டு!

ஒரு டீசரினால் உலகத்தையே உலுக்கமுடியுமா? முடியும். அது கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய திரைப்படத்தின் டீசராக இருக்கவேண்டும். ஒரு டிரெய்லரால் தனிமனிதனின் மனதை ஆட்கொள்ள முடியுமா? முடியும். கிரிஸ்டோஃபர் நோலனின் Dunkrik திரைப்படத்தின் டிரெய்லராக அது இருக்கவேண்டும். நேற்று கிரிஸ்டோஃபர் நோலனின் நீண்ட நாள் புராஜெக்டான Dunkrik திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

ஒரு இராணுவ குழு போர்விமானத்துக்கு பயந்து ஒடுங்கும் காட்சியை மட்டும் டீசராக ரிலீஸ் செய்து உலகத்தையே உலுக்கினார் நோலன். எந்த போர்விமானமும் திரையில் வராது. ஆனால், அந்த விமானத்தின் சத்தம் ஏற்படுத்தும் பாதிப்பு நடுங்கவைக்கும். இந்த உணர்வு, போர் விமானங்கள் குண்டுகளை வீசி கொத்து கொத்தாக உயிர்களை பலிகொடுத்த மக்கள், விமான சத்தம் கேட்டாலே பயந்து ஓடுவார்களல்லவா? அதனைப் போன்றது.

இப்போது வெளியாகியிருக்கும் டிரெய்லரிலும் இசை முக்கியப்பங்கு வகிக்கிறது. சொந்த நாட்டினால் கைவிடப்பட்டு, எதிரி நாட்டினால் சூழப்பட்டு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் தவிக்கும் 40,000 போர்வீரர்களின் வாழ்வுக்கான போராட்டம் தான் Dunkrik-இன் வரலாறு. இங்கு கிரிஸ்டோஃபர் நோலனுக்கு என்ன வேலை? அவர் என்ன செய்திருக்கிறார்.

துப்பாக்கியும் கையுமாக சூழப்பட்டுவிட்ட நாற்பதாயிரம் பேரின் மனநிலையை எங்கு சென்று தேடுவது. நோலனின் பார்வையில் தான் அதைக் காணவேண்டியதிருக்கிறது. இறந்து கடலில் மிதந்து அருகே வரும் சக நாட்டு வீரனின் உடலை கையால் தள்ளிவிடும் மற்றொரு போர்வீரன். மேலிருந்து விழும் குண்டுக்கு பயந்து காதுகளை அடைத்தபடி, படுத்திருக்கும் போர்வீரன். உயிரைப் பணயம் வைத்து, தப்பிச்சென்றபின் மீண்டும் அதே இடத்துக்கு அழைத்துச்செல்லப்படும் போர்வீரன் என இரும்பு கவசத்துக்குள் அடைக்கப்பட்ட சாதாரண மனிதகுணங்களை டிரெய்லரில் பதிவு செய்திருக்கிறார். முக்கியமாக குண்டுக்கு பயந்து கீழே படுக்கும் வீரனைக் காட்டும் காட்சியில் மணலில் விழுந்து குண்டு வெடிப்பதுடன் அந்த காட்சியை கட் செய்துவிடாமல், குண்டு விழுந்ததன் பாதிப்பினால் தூக்கிவீசப்பட்ட மணல்கள் வந்து விழும் வரை அந்தக் காட்சியை நீட்டித்திருக்கிறார். Dunkrik போர் முடிந்தது, உலக நாடுகள் மாறின என்ற வரலாற்றில் Dunkrik-இல் என்ன நடைபெற்றது என்பது சொல்லப்படாமலே இருப்பதை பதிவு செய்யும் படத்தை எடுக்கும் நோலன், ஒரு குண்டுவெடிப்பின் பாதிப்பை மட்டும் காட்டாமல் இருப்பாரா?

நோலன் இசை ராஜாங்கம் எனக் குறிப்பிடுவதற்கு இத்திரைப்படத்தில் நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஒரு காட்சியில் கடலில் மிதந்துகொண்டிருக்கும் போர்வீரன் ஒருவன் குண்டுகளுக்கு பயந்து நீருக்குள் போனதும், உண்மையாகவே நீருக்குள் சத்தம் கேட்கும் வகையில் சத்தங்களை மாற்றியிருப்பதும், மேலே வந்தபிறகு இயல்பான சத்தத்தில் குண்டுகள் வெடிப்பதும் நம்மை, அந்தக் களத்தில் நிறுத்திவைக்கின்றன. டிரெய்லர் முழுவதும் இதயத் துடிப்புக்கு ஒப்பான சத்தத்தை, டிரெய்லரின் பின்னணியில் சேர்த்திருக்கிறார்கள். அந்த சத்தமானது, பரபரப்புக் காட்சிகளில் வேகமாகவும், மற்ற காட்சிகளில் சீரான இடைவெளியிலும் கேட்பது, டிரெய்லரைப் பார்த்துக்கொண்டிருக்கும் நம்மை ஒரு நொடி இதயத்தை தொட்டுப்பார்த்துக்கொள்ள வைக்கிறது. கண்டிப்பாக இந்த டிரெய்லரை பார்க்கத்தவறாதீர்கள்.

சமீபத்திய செய்திகளை

App

சமீபத்திய செய்தி

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின் : லயோலா கல
சாம்பலாக போகும் பூமியின் பல பகுதிகள்… கொட
தொகுதிக்கு வரட்டும் வாய்லயே அடிக்கறோம்.. ஆத்திர
மும்பையில் இருக்கும் போதே முடிவு செய்து விட்டார
100 கோடி பொருளாதாரத்தையும்… 3,60,000 தமிழ
எடப்பாடி தலைமையில் 4-வது அணியா..? கண்ணாடி போன்ற
13 கோடியில் தங்கமே ஆடையாக.. மலைக்க வைக்கும் சரவ
அ.தி.மு.க., நினைத்தால் தமிழக நலனுக்காக தற்போது
அதிமுகவை கட்டுக்குள் கொண்டுவந்த எடப்பாடி!சத்தம்
குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும
ஏய் எதுக்கு ரெகார்ட் பண்ற, போட்டு கொடுக்க போறிய
தமிழக அரசியலையே புரட்டிப்போட : எஸ்.வி சேகர் கொட
நடிகை அமலா பாலின் கள்ளக்காதலன் இவரா..?
திகார் ஜெயில்ல விட்ட அடி இப்போ வேலை செய்யுதாமே&
விஜயகாந்தை போல ரஜினியையும் தூண்டிவிட்டு முடங்

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media