கோடிக்கணக்கில் வசூலை குவித்த ''ஆவேஷம்'' ! அதிகாரப்பூர்வ தகவல்.!
Aavesham movie update
ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ''ஆவேசம்''. இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ஃபஹத் ஃபாசில் நடிப்பால் வெற்றி அடைந்துள்ளார்.
சுஷின் ஷியாம் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ''ஆவேசம்'' திரைப்படம் உலக அளவில் ரூ. 150 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் ஃபஹத் ஃபாசில் அதிகம் வசூலித்த படம் ஆவேசம் என்பது குறிப்பிடத்தக்கது.