முழுவதும் குணமடைந்த டி.ராஜேந்திரன்.. விரைவில்  சென்னைக்கு வருகை.?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் இயக்குனர் பாடலாசிரியர், நடிகர், பாடகர் என்று பன்முகத் திறமை கொண்ட டி.ராஜேந்திரன்க்கு கடந்த மாதத்தில் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

இதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு மேல் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர். மேல்சிகிச்சைக்காக டி.ராஜேந்தர் அமெரிக்காவுக்கு சென்ற நிலையில் தற்போது அவருக்கு உடல் நலம் பூரண குணமடைந்து விட்டதாக தகவல் வெளியாகியது. 

தற்போது அவர் அமெரிக்க வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது முழுவதுமாக குணமடைந்து டி.ராஜேந்திரன் சென்னைக்கு வரவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor T Rajenthiran may arrival to chennai soon


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->