நடிகை ‘லைலா’வின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா..? - Seithipunal
Seithipunal


நடிகை லைலா 1980 ஆம் ஆண்டு கோவா மாநிலத்தில் பிறந்தார். தனது 16 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கினார்.

1996 ஆம் ஆண்டு  'துஸ்மன் துணியா கா' என்கிற இந்தி படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.

தமிழில் 1999ஆம் ஆண்டு கள்ளழகர் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக லைலா அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியது.

நடிகர் பிரசாந்துடன் பார்த்தேன் ரசித்தேன், அஜித்துடன் தீனா, சூர்யாவுடன் நந்தா, உன்னை நினைத்தது, விக்ரமுடன் தில் மற்றும் பிதமாகன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.

அந்த நேரத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த மெஹதீன் என்கின்ற தொழிலதிபருடன் லைலாவிற்கு காதல் ஏற்பட்டது. 

கிட்டத்தட்ட 7 வருடங்கள் இருவரும் காதலித்து வந்தனர்.  இருவருக்கும்  2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

திருமணத்திற்கு பின்னர் கண்டிப்பாக நடிக்கப்போவதில்லை என்று லைலா கூறிவிட்டார்.

அதன் பிறகும் சில பட வாய்ப்புகள் அவருக்கு வந்தது. ஆனால் லைலா நடிக்க மறுத்துவிட்டார்.

தற்போது அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது.  தனது இரு மகன்களையும் பார்த்துக்கொண்டு வீட்டோடு இருக்கிறார் சிரிப்பழகி  லைலா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actress laila


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->