பிரபல பாலிவுட் பின்னணி பாடகர் மரணம்.. பிரதமர் மோடி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


பிரபல இந்தி பாடகரான பூபிந்தர் சிங் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

பிரபல இந்தி பாடகரான பூபிந்தர் சிங் (வயது 82) கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து இவர் கடந்த 10 நாளுக்கு முன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பூபிந்தர் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது இறுதிச்சடங்கு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அவரது மனைவி மிதாலி தெரிவித்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரசிகர்கள், பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bollywood playback singer boobindar Singh death


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->