We are Millers படத்தின் அப்பட்டமான காப்பியே கோலமாவு கோகிலாவா..? ஆனால் அந்த தகுதி நயன்தாராவுக்கு மட்டுமே..!
கோலமாவு கோகிலா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டுகொண்டிருக்கும் நிலையில், சிங்கப்பூரில் இயக்குனராக பணியாற்றும் விஜய் சங்கராமு இப்படத்தை குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
கோலமாவு கோகிலா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டுகொண்டிருக்கும் நிலையில், சிங்கப்பூரில் இயக்குனராக பணியாற்றும் விஜய் சங்கராமு இப்படத்தை குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், We are Millers படத்தின் அப்பட்டமான காப்பியே என்றாலும் தமிழில் தயாரிக்கப்படும் படத்திற்கு தேவையான, அதிலும் கதாநாயகியை முன்னிறுத்தி எடுக்கப்படும் படத்திற்கான அத்தனை தகுதிகளும் கோலமாவு கோகிலா படத்திற்கு உண்டு என்று சொல்லலாம்.
ஒரு நடுத்தர குடும்பத்தில் அம்மாவுக்கு எதோ ஒரு நோய் ஏற்பட திடீரென ஏற்படும் பணத்தேவைக்கு ஒரு பெண்ணாக எம்மாதிரியான சவால்களை எதிர்கொள்ளும் என்பதை முன்பாதியிலும், பிரச்சனைகள் பெரிதாக வந்தாலும் தக்க வழிகளைக் கொண்டு பெண்ணால் சமாளிக்க முடியும் என்பதைச் சொல்லியதே இப்படத்தின் வெற்றி.
ஒரு காமெடிப்படமாக இதனைப் படைத்திருப்பதில் லாஜிக் மீறல்களாக நம்பும்படியான காட்சியமைப்பு இல்லையென்றாலும், அடிக்கடி ஏற்படும் கிச்சு கிச்சு காமெடிகள் லாஜிக்கை மறக்க வைக்கின்றன.
நானும் ரவுடி தான், அருவி என ஹீரோயின்களுக்கு ஸ்கோப் அதிகமுள்ள படங்கள் ஹீரோயின்களுக்காக மாறி வருவது அருமை. ஆனால் இது நயன்தாராவுக்கு மட்டும் என நின்றுவிடக்கூடாது.
நயன்தாரா குடும்பக் காட்சிகள் நடகத்தனம் போல் தோன்றினாலும் அடுத்தடுத்து ஏற்படும் படத்தின் திருப்புமுனைகள் என்ன முடிவு என்பதை எடுத்துக் கூறுகிறது.
சில விமர்சகள் காமெடி ஒன்றுமே சரியில்லை எனச் சொல்வதை திரையரங்கில் காட்சிக்கு காட்சி விழும் சிரிப்பலைகள் பார்த்துக் கொள்ளட்டும். முடிவாக காப்பியடிக்கப்பட்டாலும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளபடும் அற்புத படைப்பாக உள்ளது கோ.கோ'என்று தெரிவித்துள்ளார்.
English Summary
kolamavu kokila copy of We are Millers