திரைத்துறையில் இருந்து முற்றிலும் காணாமல் போன மொட்டை ராஜேந்திரன்.. ரசிகர்கள் ஏக்கம்.! - Seithipunal
Seithipunal


பிரபல சினிமா நடிகர் மொட்டை ராஜேந்திரன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை கதாபாத்திரம் என்று நடித்து தற்போது அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அவரது குரல் வித்தியாசமாக இருந்தாலும் கூட அவரது வசனங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். இவர் வில்லனாக நடித்திருந்தாலும் கூட இவரிடம் ஒரு குழந்தைத்தனம் இருப்பதை ரசிகர்கள் உணர்வார்கள். சமீபகாலமாக மொட்டை ராஜேந்திரன் எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார்.

இவர் ஒரு கட்டத்தில் அனைத்து படங்களிலும் நடித்து வந்த நிலையில் தற்போது அவர் கொஞ்சம் கொஞ்சமாக படவாய்ப்புகள் குறைந்து முற்றிலும் காணாமல் போய் விட்டதாக ரசிகர்கள் குறைகூறி வருகின்றனர். 

இவர் சினிமாவில் மிகவும் எளிமையான மனிதர் படப்பிடிப்பிற்கு வர வாகனங்கள் அனுப்புகிறேன் என்றால் கூட மறுத்துவிட்டு தானே இருசக்கர வாகனத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நடித்து விடுவார். இதனால் பல தயாரிப்பாளர்களுக்கு பிடித்த மனிதராக இருப்பார்.

 தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் இனி வரும் காலங்களில் மொட்டை ராஜேந்திரன்க்கு பட வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mottai Rajenthiran did Not Get any chances To act in cinema


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->