நடிகர் முரளியின் இரண்டாவது மகன் யார் தெரியுமா..? இத்துனை நாட்கள் திரை உலகிற்கு ஏன் அறிமுகபடுத்தவில்லை..? - Seithipunal
Seithipunal


பெங்களூரைச் சேர்ந்த முரளி  தமிழ் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.. இவர் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவர் 1984 -ல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

1990-ல் வந்த “புதுவசந்தம்”, 1991 -ல் வந்த “இதயம்”, படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை பெற்றார்.

இவர் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், மம்மூட்டி, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடனும் மீனா, சிம்ரன், ரோஜா, தேவயானி, லைலா, ரம்பா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகளுடனும் இணைந்து நடித்துள்ளார்

தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர்கள் பலர் தங்களுடைய குடும்பத்தை மக்களுக்கும் மீடியாவுக்கும் அறிமுகப்படுத்துவதில்லை. 

அப்படி வாழ்ந்து மறைந்த நடிகர்களில் முரளியும் ஒருவர், இவருடைய மூத்த மகன் அதர்வா தற்போது படங்களில் நடித்து பிரபலமாகி விட்டார்.

ஆனால் முரளியின் இரண்டாவது மகனை இதுவரை பலரும் பார்த்ததில்லை, இந்நிலையில் தற்போது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

murali's second son picture getting viral


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->