பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த "வில்லு" திரைப்படம் ரீரிலீஸ்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பழைய படங்களை ரீரிலீஸ் செய்வது தொடர்கதையாகி உள்ளது. தமிழகத்தில் புதுமுக நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்கள் நடித்து திரைக்கு அவரும்  ஒரு படம் கூட வெற்றி பெறுவது இல்லை . ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் ஓரிரு தினங்கள் அல்லது இரண்டு காட்சிகளோடு திரையரங்கில் இருந்து தூக்கப்படும் நிலைமை இருக்கிறது. இதனால் முன்னணி நடிகர்களின் பழைய படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரெடி செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே ரஜினியின் பாட்ஷா,பாபா, கமலஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான், சூர்யாவின் வாரணம் ஆயிரம் தனுஷின் யாரடி நீ மோகினி உள்ளிட்ட படங்களை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் விஜயின் கில்லி படம் தமிழ்நாடு முழுவதும் அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டு 20 கோடிக்கு மேல் வசூல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித்தின் தீனா, பில்லா போன்ற படங்களும் வெளியானது. இந்த வரிசையில் விஜய் நடித்த வில்லு படத்தை அடுத்த மாதம் ஜூன் மீண்டும் வெளியிடு செய்ய திட்டமிட்டுள்ளனர். வில்லு படம் பிரபுதேவா இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியானது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். வில்லு திரைப்படம்  ரீரிலீஸ் ஆவது விஜய் ரசிகர்களுக்கிடையே  மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prabhu deva directed Vijay in Villu movie Re Release


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->