பிரபு தேவாவுக்கு பிடிச்சது இந்த ரெண்டு பேர் தானாம்.. ஆச்சர்ய படுத்திய தகவல்.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் முன்னணி நடிகர் இயக்குனர் நடன இயக்குனர் என்று பல்வேறு திறமைகளை கொண்டிருப்பவர் பிரபுதேவா. அவரது நடனம் பலரிடமும் பாராட்டுதலைப் பெற்றது. மேலும் சில ரசிகர்கள் இவரை இந்திய மைக்கேல் ஜாக்சன் என்று கூட அழைப்பார்கள்.

கடந்த 1989ஆம் ஆண்டு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் நிறைய படங்களில் பிரபுதேவா நடித்துள்ளார். தற்போது, பிரபுதேவா நடிப்பில் மை டியர் பூதம் திரைப்படம் உருவாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து ரேக்லா, யுங் மங் சங், ஊமை விழிகள், பொய்க்கால் குதிரை, பகீரா, முசாசி உள்ளிட்ட திரைப்படங்கள் பிரபுதேவா கைவசம் இருக்கின்றன.

இந்நிலையில் நடிகர் பிரபுதேவா தனக்கு பிடித்த இசையமைப்பாளர்களின் பெயர்களை கூறி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் யார் என்ற கேள்விக்கு பிரபுதேவா, "தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் இளையராஜா." என்று பதில் கூறியுள்ளார்.

இது அவருடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை தேவிஸ்ரீ பிரசாத் சமூக வலைதளங்களில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prabhu deva favorite musician


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->