''புஷ்பா 2'' திரைப்படத்தின் நியூ அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.!
Pushpa 2 movie new update
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா'. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இதனை தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ''புஷ்பா 2'' திரைப்படத்தின் முதல் பாடலான 'புஷ்பா புஷ்பா' என்ற பாடல் நாளை மாலை 5 மணி அளவில் வெளியாகும் என பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
மேலும் இந்த பாடல் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Pushpa 2 movie new update