சர்ச்சையில் சிக்கி டிவிட்டரை விட்டு தெறித்து ஓடிய ராஷிக்கண்ணா.! வைரலாகும் இன்ஸ்ட்டா பதிவு.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் அயோக்கியா, இமைக்கா நொடிகள், சங்கத்தமிழன், அடங்கமறு, அரண்மனை 3, துக்ளக் தர்பார் மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ராஷி கண்ணா. 

அடுத்ததாக நடிகர் கார்த்தியின் சர்தார் படத்தில் இவர் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவருக்கு தமிழில் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கின்றது. 

நடிகை ராஷிகண்ணா ட்வீட்டர் பக்கத்தில் ஆக்டிவாக செயல்பட கூடியவர். சமீபத்தில் இவர் தென் இந்திய சினிமா குறித்து தவறாக ஒரு கருத்து கூறி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். 

இதனால் அவருக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதன் காரணமாக, நடிகை ராசி கண்ணா மன உளைச்சலில் இருந்த நிலையில், தற்போது அவர் ட்விட்டர் கணக்கில் இருந்து விலக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

இதுற்குறித்து அவர், "எனது ட்விட்டர் கணக்கை செயலிழக்க வைத்து விட்டேன் என்றும், இனி இன்ஸ்டாகிராமில் தொடர்வேன் என்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rashikanna left from twitter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->