''ராயன்'' திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal



நடிகர் தனுஷ் தனது 50 வது திரைப்படத்தை அவரே எழுதி, இயக்கி நடித்துள்ளார். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ''ராயன்'' என பெயரிடப்பட்டுள்ளது. 

ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் ''ராயன்'' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'அடங்காத அசுரன்' என்ற முதல் பாடல் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாக உள்ளதாக பட குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rayan movie first song release update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->