பாலிவுட் திரைப்படங்களை பின்னுக்கு தள்ளிய ஆர்.ஆர்.ஆர்.! கலெக்ஷனில் முதலிடம்.!  - Seithipunal
Seithipunal


பாகுபலி திரைப்படத்திற்கு பின்னர் இயக்குனர் ராஜமவுலி இயக்கிய வரலாற்று பின்னணி கொண்ட திரைப்படம்தான். ஆர்.ஆர்.ஆர் இந்த திரைப்படம் கடந்த மார்ச் 25ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகியது. 

பான் இந்தியா திரைப்படமாக உருவாகின்ற இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் கன்னட மொழியில் மொழி மாற்றம் செய்யப்படாமல் நேரடியாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தெலுங்கிலேயே வெளியாகியது. 

ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 550 திரையரங்குகளில் வெளியாகியது. இந்த நிலையில், படத்தின் வசூல் நிலவரம் பிரமிக்க வைத்துள்ளது. பாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் முன்னணியில் இருக்கும் திரைப்படங்கள் கங்குபாய் கத்தியவாடி மற்றும் தி காஷ்மீர் பைல்ஸ். 

13 நாட்களில் கங்குபாய் கத்தியவாடி 100 கோடி வசூல் செய்தது. அதுபோல தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் 8 நாட்களில் 100 கோடி வசூல் செய்தது. ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களின் சாதனைகளையும் முறியடித்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பாலிவுட்டில் வெறும் ஐந்தே நாளில் 100 கோடி வசூல் செய்து இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RRR beat bollywood movies


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->