படப்பிடிப்பில் நடிகைக்கு ஏற்பட்ட காயம்.! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.! - Seithipunal
Seithipunal


கன்னடத் திரையுலகைச் சேர்ந்த சம்யுக்தா ஹெக்டே கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர். தமிழில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து, கோமாளி திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். 

இதனை தொடர்ந்து மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, அவர் பெங்களூரில் வசித்து வருகின்றார். அபிஷேக் வசந்த் இயக்கத்தில் க்ரீம் என்ற திரைப்படத்தில் அவர் நடிக்கிறார். 

இதற்கான படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள ஸ்டூடியோவில் நேற்று நடந்தது. அப்போது சண்டைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு நடித்தபோது அவரது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். 

இதில் அவருக்கு படு காயம் ஏற்பட்ட நிலையில் படக்குழுவினர் நடிகை சம்யுக்தாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து, இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samyuktha hegde get woonds in shooting


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->