பாலிவுட் ஹீரோவாகும் சூர்யா.? இயக்குனர் இவரா.?! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சுதா கொங்கரா இயக்கிய சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

அத்துடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் சூர்யா அதிரடி வில்லனாக நடித்திருந்தார். தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மேலும், அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகும் சூரரைப்போற்று இந்தி ரீமேக் படத்தில் சூர்யா ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படங்கள் அனைத்தையும் நடித்து முடித்துவிட்டு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். அடுத்ததாக சுதா கொங்கரா, ஞானவேல், சிறுத்தை சிவா உள்ளிட்ட இயக்குனர்களின் படங்களில் சூர்யா கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தற்போது பிரபல பாலிவுட் நடிகர் பரூக் கபீர் இயக்கவுள்ள  ஒரு படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் ஹிந்தி தமிழ் உள்ளிட்ட 2 மொழிகளில் தயாராக உள்ளதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் கசிந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Surya may act In faruk kabhir Movie


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->