#BREAKING : துணிவு, வாரிசு படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி ரத்து.. அரசு அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியுள்ள திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகிய ரசிகர்களையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் துணிவு திரைப்படம் வரும் ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

அதேபோல் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதில், சரத்குமார், ஷியாம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இதனிடையே வாரிசு படத்தின் ட்ரைலர்  வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வாரிசு திரைப்படமும் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் - விஜய் 2 திரைப்படங்களும் நாளை (ஜனவரி 11ம் தேதி) ஒரே நாளில் வெளியாகியுள்ளதால் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 இந்த நிலையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு பொங்கல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில், ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து.

திரையரங்கு வளாகங்களில் அதிக உயரத்தில் பேனர், பாலாபிஷேகம் செய்ய தடை.

தியேட்டர்களில் விதிகளை மீறி அதிக டிக்கெட் கட்டணம் மற்றும் பார்க்கிங் வசூலித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thunivu and Varisu movie Pongal special shows cancelled


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->