அரசியல் கட்சிகளின் வரி விலக்கை ரத்து செய்ய கோரிய மனு: உச்சநீதி மன்றத்தில் தள்ளுபடி

அரசியல் கட்சிகளின் வரி விலக்கை ரத்து செய்ய கோரிய மனு:  உச்சநீதி மன்றத்தில் தள்ளுபடி

அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் வருமான வரி விலக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அரசியல் கட்சிகளுக்கு வருமானவரிச் சட்டத்தின்படி நூறு சதவிகித வரி விலக்கு உள்ளதாக மத்திய நிதி செயலாளர் கூறி இருந்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், பல்வேறு சட்டப் பிரிவுகளை சுட்டிக்காட்டி, சாமானிய மக்கள் வரி செலுத்தும் போது, அரசியல் கட்சிகளுக்கு மட்டும் எப்படி விலக்கு அளிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

எனவே இந்த வரிவிலக்கை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் அது ஒட்டுமொத்த சமூகத்திற்குமே அபாயகரமானது என்றும் கூறி இருந்தார்.

மேலும், பேரவையில் பெரும்பான்மை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு குறுக்கு வழிகளைக் கடைபிடித்து வருவதால், கட்சிகளால் நாட்டுக்கும் மக்களுக்கும் பயன் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு, அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள பணம் தேவை என்பதால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தது..

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media