ஆயுளைக் கூட்ட,உப்பைக் குறையுங்கள்..,

ஆயுளைக் கூட்ட,உப்பைக் குறையுங்கள்..,

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்போம். ஆனால் அதுவே அளவுக்கு மிஞ்சினால்?

குறைவான உப்பை உட்கொள்வதன் மூலம், ஆயுளைக் கூட்ட முடியும் என்று புதிய ஆய்வொன்று சொல்கிறது.

உப்பில் உள்ள சோடியம் உடம்பில் அதிகம் சேர்வது ஆபத்தை விளைவிக்கும் என்பதையும், குறைவாக எடுத்துக்கொள்வதன் மூலம் ஆயுளைக் கூட்ட முடியும் என்பதையும் அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதன் தொடர்பில் 24 ஆண்டுகளுக்கும் அதிகமாக அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 3,000 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் உயிரிழக்கும் அபாயம் உணவில் சேரும் உப்பு அளவைப் பொறுத்து அமைந்திருந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media