சுல்தானை வீழ்த்துமா தங்கல்..!

சுல்தானை வீழ்த்துமா தங்கல்..!

தங்கல் பட வசூலின் மூலம் அமீர்கான் வசூலில் சுல்தான் என மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

மல்யுத்தத்தை மையமாக கொண்ட திரைப்படம் “தங்கல்” இப்படத்தில் அமீர்கான் மல்யுத்த வீரராக நடித்து இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. 4 நாட்களில் 150 கோடியை வசூலித்துள்ளது. வெளியான முதல் நாளிலே ரூ.29.78 கோடியை வசூல் செய்து தனது முந்தைய படமான பிகே வின் முதல்நாள் வசூல் சாதனையை முறியடித்தது. அமீர்கான் படங்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்த கஜினி, 3 இடியட்ஸ், தூம்3, பிகே படங்களின் வரிசையில் “தங்கல்” இடம் பெற்றுள்ளது. சல்மான் கான் நடித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மற்றொரு படம் சுல்தான். அதை முறியடிக்குமா தங்கல் என்பது பற்றித்தான் திரை ரசிகர்கள் மத்தியில் பேச்சு.

சமீபத்திய செய்திகளை

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media