செய்திபுனல்
இராகுகால கோடாங்கி வீடியோ
சமீபத்திய செய்தி
சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வைத்துள்ளார்கள் : சத்தியபாமா யூனிவர்சிட்டி நிறுவனர் ஜேபிஆரின் மகள் கண்ணீர் பேட்டி!|            |தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும்.. தனியாக பிரித்துவிட்டால் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும்.. மத்திய அரசை எச்சரிக்கும் உளவு அமைப்பு..!|            |வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையாளமே ஆட்டம் காண்கிறது... ஆதாரை அக்குவேர் ஆணிவேராக கிழித்து தொங்க விட்ட அமெரிக்க பத்திரிக்கை..!|            |தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..கொந்தளிக்கும் ரசிகர்கள் : பாஜக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.,|            |வேற வழியே இல்லை... தமிழகத்தையே உலுக்க போகும் பெரிய லெவல் ரெய்டு... அந்த ஒரு மேட்டரில் சிக்கி சின்னா பின்னமாகப்போகும் ரஜினி..!

வெற்றி கொடி நாட்டிய தனுஷின் கொடி நல்லாவே பறக்குது…

October 29, 2016 12:34 pm
வெற்றி கொடி நாட்டிய தனுஷின் கொடி நல்லாவே பறக்குது…

காது கேட்காத, வாய் பேசமுடியாத கருணாஸுக்கு அரசியலில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை. ஆனால், அவருடைய ஊனத்தால் அவரால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. தன்னால் முடியாததை தனது மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் கருணாஸுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒரு குழந்தையை அரசியலில் களமிறக்க திட்டமிடுகிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் கட்சியில் இருக்கும் கருணாஸ், ஒருமுறை விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் தீக்குளித்து இறந்து போகிறார். சிறிய வயதிலிருந்தே அப்பாவுடன் கட்சி அலுவலகத்துக்கு சென்றுவரும் மூத்த மகன் தனுஷ் பெரியவனான பிறகு தனது அப்பாவின் ஆசைக்காக கருணாஸ் இருந்த கட்சியிலேயே சேருகிறார். இளைய தனுஷ் கல்லூரி பேராசிரியராக ஆகிறார்.

இளம் வயதிலிருந்தே எதிர்கட்சியில் இருக்கும் திரிஷா மீது அரசியல்வாதி தனுஷுக்கு காதல். எதிரெதிர் கட்சிகளாக இருந்தாலும், இவர்கள் இரண்டு பேரும் காதலர்களாக வலம் வருகிறார்கள். அதேவேளையில், கல்லூரி பேராசிரியரான மற்றொரு தனுஷ், லெக்கான் கோழி முட்டையை டீத்தூளில் நனைத்து நாட்டுக் கோழி முட்டை என்று விற்று வரும் அனுபமா பரமேஸ்வனை காதலிக்கிறார்.

kodi-2

அவள் ஏன்? அப்படி ஏமாற்றி விற்கிறார் என்று தனுஷ் கேட்கையில், தனது ஏரியாவில் இருக்கும் விஷவாயு தொழிற்சாலையை மூடுவதற்காக நிறைய பணம் தேவைப்படுவதால் அதற்காகத்தான் இந்த மாதிரியான ஏமாற்று வேலையை செய்து வருவதாக அனுபமா கூறுகிறார். இதைக் கேட்கும் தனுஷ், தனது அண்ணான அரசியல்வாதி தனுஷிடம் இதைப்பற்றி சொல்கிறார். அந்த தொழிற்சாலையை மூடுவதற்காகத்தானே எனது அப்பா உயிரை விட்டார். அப்படியிருக்கையில் அந்த தொழிற்சாலையில் இருந்து எப்படி விஷவாயு வெளியே வருகிறது என்பது குறித்து கட்சி தலைமையிடம் சென்று நியாயம் கேட்கிறார் அரசியல்வாதி தனுஷ். ஆனால், கட்சி தலைமையோ, பல கோடிகளை லஞ்சமாக வாங்கிக் கொண்டு அந்த தொழிற்சாலையில் உள்ள விஷவாயுக்களை அப்புறப்படுத்தாமல் விட்டதற்கு உடந்தையாக இருப்பது தனுஷுக்கு தெரிய வருகிறது.

இடைத் தேர்தல் நெருங்கி வருவதால் இந்த பிரச்சினையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தனுஷை எஸ்.ஏ.சந்திரசேகர் சமாதானப்படுத்துகிறார். வருகிற தேர்தலில் தனுஷுக்கு பதவி கொடுப்பதாகவும், அந்த பதவியை வைத்து அந்த தொழிற்சாலையில் உள்ள விஷவாயுக்களை அப்புறப்படுத்துமாறும் கூறுகிறார். ஆனால், அதுவரை பொறுத்துக்கொள்ள முடியாத தனுஷ் இந்த விஷயத்தை எதிர்க்கட்சியை சேர்ந்த தனது காதலி திரிஷாவிடம் சென்று கூறி மனவேதனைப்படுகிறார். ஆனால், அரசியல் வேறு, காதல் வேறு என்று இருக்கும் திரிஷாவோ இந்த விஷயத்தை பொது மேடையில் போட்டு உடைக்கிறார். இதனால் கட்சி தலைமைக்கு தனுஷ் மீது கோபம் ஏற்படுகிறது. இந்நிலையில், இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்களை கட்சி தலைமை அறிவிக்கிறது. அப்போது தனுஷின் பெயரும் அந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுகிறது. அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் தனது காதலி திரிஷாவை எதிர்த்து போட்டியிடுகிறார். அதேநேரத்தில், பேராசிரியர் தனுஷை கொலை செய்வதற்கு ரவுடி கும்பல் ஒன்று கிளம்புகிறது.

இறுதியில், கோபம் கொண்ட கட்சி தலைமை தனுஷுக்கு போட்டியிட வாய்ப்பு அளித்ததன் காரணம் என்ன? தனது காதலியை எதிர்த்து தனுஷ் வென்று விஷவாயு தொழிற்சாலையை அப்புறப்படுத்தினாரா? தம்பியை கொலைசெய்ய கிளம்பும் கொலை கும்பலை ஏவிவிட்டது யார்? தனது தம்பியை அரசியல்வாதி தனுஷ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. தனுஷ் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வெவ்வேறு விதமான நடிப்பையும், தனது உடல்மொழியையும் மாற்றி நடித்திருக்கிறார். அரசியல்வாதி கெட்டப்பில் ரொம்பவும் ‘மாஸாக’ தெரிகிறார். அப்பாவியான கெட்டப்பில் தனக்கே உரிய சாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன், ரொமான்ஸ் என இரண்டிலும் அவரது தனித்தன்மை இந்த படத்திலும் பளிச்சிடுகிறது.

அரசியலில் பெரிய இடத்துக்கு வரவேண்டுமானால் எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் துணிச்சலான பாத்திரத்தை அலட்டாமல் செய்து பளிச்சிடுகிறார் திரிஷா. படத்தில் பேசவைக்கக்கூடிய மற்றொரு கதாபாத்திரம் எஸ்.ஏ.சந்திரசேகர்தான். ஒரு அரசியல்வாதிக்கே உரிய மிடுக்கு இவரிடம் அதிகமாகவே தோன்றுகிறது. அதேநேரத்தில், ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் மிகவும் மென்மையான அரசியல்வாதியாக மனதில் அழகாக பதிந்திருக்கிறார். மற்றொரு நாயகியான அனுபமா பரமேஸ்வரன் பார்க்க அழகாவும், நடிப்பில் மென்மையும் கலந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

தனுஷின் அப்பாவாக வரும் கருணாஸ் ஆரம்பத்தில் ஒருசில காட்சிகளே வந்தாலும், காது கேட்காத, வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இவருடைய மனைவியாக வரும் சரண்யா பொன்வண்ணன் வழக்கம்போல தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அரசியல் பற்றிய கதை என்றாலும், பிரச்சினைக்குள் ஆழமாக செல்லமால் தன்னுடைய எல்லை எதுவரை? என்பதை புரிந்துகொண்டு அதை நேர்த்தியாக செய்திருக்கிறார். திரைக்கதை விறுவிறுப்பாக செல்வது ரசிகர்களை இருக்கையை விட்டு எழுந்திருக்க விடாமல் செய்கிறது. மேலும், வசனங்களும் படத்திற்கு பக்கதுணையாக நிற்கிறது.

முதல் முறையாக டபுள் ரோல். தாடியோடு வரும் கொடிக்கு தான் அதிக காட்சிகள், அதிக முக்கியத்துவம் இரண்டாவது தனுஷ் காலேஜ் புரொஃபசர் அன்பு, வேட்டி சட்டை, கண்ணாடி, தாடி என்றால் கொடி. இரண்டு கதாபாத்திரமும் பின்னி எடுத்து இருக்கிறார் அலட்டி கொள்ளாமல் ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக அழகாக நடித்துள்ளார் தனுஷ் என்று தான் சொல்லனும் அண்ணன் கொடி அரசியல்வாதிகாண தோற்ற்றம் நடையுடை பாவனை அனைத்தும் சிறப்பாக செய்துள்ளார். அதேபோல் அன்பு காலேஜ் புரொஃபசர் அந்த கதாபாத்திரமும் சிறப்பாக அமைதியாக செய்துள்ளார். இதே காலேஜ் புரொஃபசர் அரசியல்வாதியாக மாறும்போது அதற்கு ஏற்ப நடிப்பு தனுஷ் எப்ப்வவும் போல் அசத்தல்

புதுமுகமாக அறிமுகம் அனுபாமா நடிப்பில் சும்மா பிச்சு உதறுகிறார் முட்டை வியாபாரம் செய்யும் அனுபாமா செய்யும் மோசடிகள் அருமை அதேபோல் தனுஷ் மற்றும் சரண்யாவிடம் மோதும் காட்சிகள் அரங்கமே அதிருகிறது அந்த அளவுக்கு பிரமாதமாக நடித்துள்ளார்.

dhanush

த்ரிஷா இருக்கும் இளமையைப் பார்த்தால், இன்னும் ஒரு ரவுண்டு வரலாம். கோலிவுட்டின் அரசியல் சினிமாவில் த்ரிஷாவின் கதாப்பாத்திரம் ரொம்பவே ஆச்சர்யம். முதல் முறையாக வில்லி ஆனால் பல இடங்களில் கஞ்சிபோட்ட காக்கி சட்டை போல இருக்கிறார். இன்னும் கொஞ்சம் எதார்த்தம் காண்பித்து இருக்கலாம், கத்தி பட விஜய் போல இரும்புக் கம்பியைப் பிடித்து அடிக்கும் போது லைட்டாக சிரிப்பு வருகிறது.

எஸ்.ஏ.சந்திரசேகர்,சரண்யா பொன்வண்ணன்,காளி வெங்கட் என சப்போர்ட் காஸ்டிங் செய்யும் அனைவருமே அவர்களது கதாப்பாத்திரத்தை சரியாக செய்து இருக்கிறார்கள். காமெடி நேரத்தில் சிரிக்க வைக்கிறார். செண்டிமெண்ட்டில் கலங்க வைக்கிறார் காளி.

இயக்குனர் துரை செந்தில் நல்ல கதையும் திரைக்கதையும் அமைத்துள்ளார் என்று தான் சொல்லணும் முதல் படம் போல இதில் மெசேஜ் எல்லாம் இல்லை அரசியல்வாதிகள் தோல் உரித்து கடும் படம் சில இடங்களில் தடுமாறியுள்ளார் இயக்குனர் துரை அதிலும் இரண்டாம் பாகத்தில் கொஞ்சம் பாதரசம் விஷயத்திலும் கொடி கொலையிலும் கவனம் இன்னும் கொஞ்சம் செலுத்தி இருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்து இருக்கும.

இசை சந்தோஷ் நாராயணன் பாடல்கள் ரசிக்கும் படியுள்ளது எஸ்.வெங்கடேசன் ஒளிப்பதிவு அருமை இரண்டு தனுஷ்க்கு வித்தியாசம் எல்லாம் சிறப்பு கதைக்கு தேவையான ஒளிப்பதிவு

மொத்தத்தில் கொடி பட்டொளி வீசி பறக்கிறது நிச்சயம் மக்கள் இந்த கொடிக்கு ஆதரவு தருவார்கள் என்பதில் எந்த சந்தேகம் இல்லை

App

சமீபத்திய செய்தி

சோறு தண்ணி கொடுக்காமல் என்னை வீட்டில் அடைத்து வ
தமிழகத்தை தொட்டாலே இந்தியாவின் அழிவு ஆரம்பமாகும
வங்கியுடன் ஆதார் இணைந்துள்ளதா..? நாட்டின் அடையா
தொடர்ந்து ரஜினியை சீண்டும் சுப்பிரமணியன் சாமி..
வேற வழியே இல்லை… தமிழகத்தையே உலுக்க போகும
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜூலை 11-ல்
வங்கி லாக்கர்களில் கொள்ளை போனால் வாடிக்கையாளரே
அ.தி.மு.கவுக்கு வேறு வழியே இல்லை : பொன்னார் பளி
டேங்கர் லாரி விபத்து : பெட்ரோல் பிடிக்க சென்ற 1
அரளி விதையும் சைவம் தானே, நீங்க சாப்பிடுவீங்களா
பாலம் திறப்புவிழாவில் சசிகலா,தினகரன் பேனர் : அத
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எடப்பாடி அரசு கவிழும
இளைஞர்களின் போராட்டம் வீண் தானா..? ராணுவத்தை கொ
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருக்கும் பரோல் வழங்கி
“கேப்டன் பதவிக்கு நீ லாயக்கு இல்லை”

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media