பதவி விலக தோனியை வற்புறுத்தவில்லை…,!!

பதவி விலக தோனியை வற்புறுத்தவில்லை…,!!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தின் (பிசிசிஐ) வற்புறுத்தல் காரணமாகத் தான் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஆதித்யா வெர்மா தெரிவித்தார்.

இதனால், இந்தியத் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மீது நெருக்கடி அதிகமானது. ஜனவரி 4ஆம் தேதி கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனியின் முடிவு அணியின் நன்மைக்கே என மூத்த வீரர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

ஆனால், ஆதித்யாவின் இந்தக் கருத்து ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த பிரசாத், தோனியை யாரும் வற்புறுத்தவில்லை.

பதவியில் இருந்து விலகுவது, அவருடைய சொந்த முடிவு. ரஞ்சி டிராப்பி அரையிறுதியின் போது, தோனி தானாகவே பதவில் விலகல் குறித்து பேசினாரே தவிர நான் வற்புறுத்தவில்லை எனக் கூறினார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media