திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனை சென்ற வைகோவிற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு. வைகோ வாகனம் மீது கற்கள் வீசி தாக்கியதால் பரபரப்பு. #Vaiko #DMKCadres #KauveryHospital #Karunanidhi

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை குறித்து விசாரிக்க ராகுல் காந்தி, அதிமுக-வின் தம்பிதுரை போன்ற தலைவர்கள் தொடர்ந்து வந்து சென்றனர். இந்நிலையில், அவர் உடல் நலம் குறித்து விசாரிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை மருத்துவமனைக்கு உள்ளே விடாமல், திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மருத்துவமனைக்கு உள்ளே போகாமல் திரும்பிச் சென்றார் வைகோ.

இந்த விஷயம் பற்றி,’வைகோ முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால், நாங்கள் அவரை நேரடியாக வந்து அழைத்து சென்றிருப்போம். வைகோவை அழைத்துச் செல்லும் முன், கட்சியினர் உணர்ச்சிவசப்பட்டதால் அவர் திரும்பிச் சென்றுவிட்டார். இதற்காக, திமுக-வின் சார்பில் வருத்தம் தெரவித்துக் கொற்கிறோம்.’ என்று டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media