இதோ எங்க தலைவர் வந்துட்டாருல்ல, ரிலீஸ் பண்ணிட்டோம்ல அதிமுக, அப்பல்லோவை வம்பிழுக்கும் தி.மு.க அன்பழகன்…

இதோ எங்க தலைவர் வந்துட்டாருல்ல, ரிலீஸ் பண்ணிட்டோம்ல அதிமுக, அப்பல்லோவை வம்பிழுக்கும் தி.மு.க அன்பழகன்…

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளதாக காவேரி மருத்துவமனை பூரண நலம் பெற்று தொலைக்காட்சி பார்ப்பது போன்ற அவரின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது.

கலைஞரின் புகைப்படம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திமுக தொண்டர்கள் கழக முன்னணி தலைவர்கள் என அனைவரும் தலைவர் மீண்டும் வந்துவிட்டார் என்கிற உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், திமுக தென் சென்னை மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன், ‘காவேரி மருத்துவமனைக்கு வாழ்த்துகள்’ என்று கூறி, ‘அ.தி.மு.க, அப்பல்லோ மருத்துவமனை மற்றும் அப்பல்லோ சங்கீதா ரெட்டி ஆகியோரின் ட்விட்டர் பக்கங்களை இணைத்து ட்வீட் செய்துள்ளார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media