பாலிடெக்னிக் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப பதிவு தொடங்கியுள்ளது!! - Seithipunal
Seithipunal


தமிழக உயர்கல்வித்துறையின் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கீழ் 57 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரியில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.

இது குறித்து தொழில்நுட்ப கல்லூரி கமிஷனர் வீரராகவரா நேற்று வெளிய விட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்க ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. இயற்பியல்,கணிதம்,வேதியல்,கணித அறிவியல்,தகவல் தொழில்நுட்பம்,விலங்கியல்,உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுடன் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரி நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் எஸ்.எஸ்.எல்.சி உடன் இரண்டாம் ஆண்டு ஐடிஐ தேர்ச்சி பெற்ற மாணவர்களும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் செய்ததற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள்  வருகிற 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப பதிவு கட்டணமாக பொது பிரிவினர்களுக்கு ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்.சி,எஸ்.டி பிரிவினருக்கு பதிவு கட்டணம் கிடையாது. ஆன்லைன் வாயிலாக பாலிடெக்னிக் படிப்புக்கு விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Polytechnic direct second year admission online application registration has started


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->