பி.எட் படிப்புகளுக்கு அனுமதி - தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


B.Ed சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு திறந்தநிலை தொலைதூர கல்வி மூலம் பலரும் பகுதி நேரமாக பயின்று வருகின்றனர். இதனால் கூடுதல் படிப்பு படிக்க விரும்பும் நபர்கள் பலனடைந்து வந்த நிலையில், பி.எட் படிப்புகளை தொலைதூர கல்வியில் நடத்துவதற்கு யூ.ஜி.சி ஆட்சேபனை தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், " B.Ed சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது. தொலைதூர கல்வி மூலம் பி.எட் படிப்பை நடத்த யு.ஜி.சி தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகம் அனுமதி அளித்துள்ளது. 

இதற்கான வகுப்புகள் மே மாதம் முதல் தொடங்கும். ஆயிரம் பேருக்கு சேர்க்கை நடைபெறும். கூடுதல் விவரங்கள் தேவைப்படுபவர்கள் www.tnou.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம் " என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UGC Approve B Ed Education Scheme Open University


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->