‘விஜயகாந்த்தை திமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது’ என்பதற்காக ஜெயலலிதா ஏவிய சகுனிதான் இந்த வைகோ; தமிழச்சி

‘விஜயகாந்த்தை திமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது’ என்பதற்காக ஜெயலலிதா ஏவிய சகுனிதான் இந்த வைகோ; தமிழச்சி

அதிமுக / திமுகவிற்கு மாற்று கட்சியாக மூன்றாவது அணியாக மக்கள் நலக்கூட்டணியை உருவாக்குவதாக கூறி அரும்பாடு பட்டவர் அரசியல் புரோக்கர் வைகோ.

தமிழக அரசியலில் மூன்றாவது அணி உருவாக்கத்தின் இரகசியம் ‘விஜயகாந்த்தை திமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது’ என்பதற்காக ஜெயலலிதா ஏவிய சகுனிதான் இந்த வைகோ.

“இந்த அணி, மக்கள் எதிர்பார்த்தக் கூட்டணி, மாற்றம் தரும் கூட்டணி, மகத்தான கூட்டணி, மாபெரும் வெற்றிக்கூட்டணி என்றெல்லாம் வார்த்தை ஜாலம் காட்டிய அரசியல் புரோக்கர் வைகோ….

தேர்தலின் போது கடைசி நேரத்தில், ‘நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று வைகோ ‘ஜகா’ வாங்கிய போதுதான் மக்கள் நலக்கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் வைகோவின் துரோகத்தை உணர்ந்தன.

தமிழ்நாட்டு அரசியல் பெரும் நெருக்கடியில் பா.ஜ.கவினரின் கட்டுப்பாட்டில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று வைகோவிற்கு இன்னொரு கட்சியில் சகுனி வேலைக்கு பா.ஜ.க.வினரால் அனுப்பப்பட்டுள்ளார்.

கூடிய விரைவில் அதிமுகவிற்குள் வைகோ ஐக்கியமாகப் போகும் செய்தி வரத்தான் போகிறது… இந்த மனிசனுக்கு மானம், ரோசம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல் வாய் மட்டும் என்னமா அரசியல் பேசுகிறது. அத்தனை வார்த்தைகளிலும் தான் எத்தனை மோசடிகள்?

“மக்கள் நலக் கூட்டணி, மக்கள் எதிர்பார்த்த கூட்டணி” என்று பேசிய வாய்க்கு, “மக்கள் விரும்பாத மக்கள் கூட்டணியில் எனக்கென்ன வேலை” என்று வைகோ அறிக்கைவிட முடியுமா? எந்த அயோக்கியத்தனம் செய்தாலும் மக்களை ஏன்டா இழுக்கிறீர்கள்?

குழுசேர்

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares