வைகோ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கண்டனம் #VaikoAttacked #Vaiko #DMKCadre #MKStalin #KauveryHospital #Karunanidhi

வைகோ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கண்டனம் #VaikoAttacked #Vaiko #DMKCadre #MKStalin #KauveryHospital #Karunanidhi

திமுக தலைவர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் கருணாநிதியைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவரை மருத்துவமனைக்கு உள்ளே விடாமல், திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தினர். இதனால், அப்படியே திரும்பி சென்றுவிட்டார் வைகோ.

இந்த விஷயம் குறித்து, திமுக பொருளாலர் ஸ்டாலின், ” தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்த மதிமுக பொது செயலாளர் திரு வைகோ அவர்களை தடுத்து நிறுத்தியதை நான் கண்டிக்கிறேன். மருத்துவமனையில் நான் இல்லாத நேரத்தில் வைகோ அவர்களுக்கு நேர்ந்த இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன், திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் யார் ஈடுபட்டு வந்தாலும் கழக தோழர்கள் அவர்களுக்கு எதிராக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தலைவர் கலைஞர் அவர்களுக்கோ, எனக்கோ எக்காலத்திலும் உடன்பாடானது அல்ல.  கழகத்திற்கு எதிரான பிரச்சாரங்களை அரசியல் ரீதியாக ஜனநாயக முறையில் எதிர்கொள்ளும் சக்தி மிக்க தொண்டர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கழக தோழர்கள் தவிர்த்து அமைதி காக்குமாறு கண்டிப்புடன்  கேட்டு கொள்கிறேன் ” என்றார்.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media