சசிகலாவின் மெகா ‘கவர்ச்சி’ ஆபர் லேட்டஸ்ட் மாடல் ஆப்பிள் போன், வீடு தேடி வரும் காரு!

January 10, 2017 9:39 am
சசிகலாவின் மெகா ‘கவர்ச்சி’  ஆபர் லேட்டஸ்ட் மாடல் ஆப்பிள் போன், வீடு தேடி வரும் காரு!

அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதில் இருந்து கட்சி மாவட்டந்தோறும் உள்ள நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். தினமும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தரும் சசிகலா, கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி தனது செயல்பாடுகளை தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, பொங்கல் பரிசு வழங்கி, அ.தி.மு.க., பேச்சாளர்களை குஷிப்படுத்த, சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று கட்சி பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினரை சந்தித்த சசிகலா அனைவரும் கட்சி வளர்ச்சிக்கு, பாடுபட வேண்டும்’ என, அறிவுறுத்தியிருக்கிறார்.

பின், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அத்துடன், அவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி மகிழ்விக்க, சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது. மூன்று மாதங்களாக, அ.தி.மு.க., பேச்சாளர்களுக்கும், கலைக் குழுவினருக்கும் எந்த வாய்ப்பும் இல்லாததால், வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கின்றனர். எனவே, அவர்களின் திறமைக்கேற்ப, மூன்று பிரிவாக பிரித்து, பொங்கல் பரிசு வழங்க, சசிகலா திட்டமிட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்து இருக்கின்றனர். இதன்படி, 25 ஆயிரம் ரூபாய் முதல், லேட்டஸ்ட் மாடல் ஆப்பிள் போன், ஒரு லட்சம் ரூபாய் வரை, ரொக்கமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழுசேர்

© 2017, S. G. S. Creative Media