ஜெயலலிதாவின் ‘இரும்பு பெண்மணி’ பட்டமும் இனி சசிகலாவிற்குதானாம்!

January 7, 2017 10:41 am
ஜெயலலிதாவின் ‘இரும்பு பெண்மணி’ பட்டமும் இனி சசிகலாவிற்குதானாம்!

தன் தோழி ஜெயலலிதா மறைந்ததும் அவரின் உடமைகளையும் பதவியையும் தனதாக்கிக்கொண்ட சசிகலாவின் சாதூர்யம், அந்த ராஜதந்திரம் என சசிகலாவின் சக்தி சசிகலாவேதான். அவரே ஒரு அரசியல் ராஜ தந்திரியின் மனைவிதான் அவருக்குப் பின்னணியில் எந்த ஒரு ராஜ தந்திரமும், ஒரு சக்தி எல்லாம் தேவை இல்லை’ எனச் சொல்பவர்கள். ஜெ., இறந்தபோது அப்போலோவில் நடந்த நடவடிக்கைகளைச் சொல்கிறார்கள். ஜெ., இறந்த தகவலைக் கேட்டதும் உடைந்து பதறி அழுத சசிகலா, அடுத்தடுத்து செய்த நடவடிக்கைகள் அதை உணர்த்தின.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது இதே பன்னீருக்கு எம்.எல்.ஏ ஸீட்கூட கொடுக்கக் கூடாது என ஜெ.,விடம் போராடியவர் சசிகலா. ஆனால், இப்போது சூழல் உணர்ந்து அவரே அதே பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்க ஒப்புக்கொண்டார். புதிய அமைச்சரவை என்றதுமே, சில அமைச்சர்களை நீக்க உடனே பட்டியல் ரெடி செய்தார்கள் மன்னார்குடி கோஷ்டிகள்.

ஆனால், ஒரு முறைப்போடு அதே அமைச்சரவையை உறுதிசெய்தார் சசிகலா. ஜெ., உடலை அடக்கம்செய்வது எங்கே என அதிகாரிகளும் சீனியர் நிர்வாகிகளும் குழப்பிக்கொண்டே இருந்தபோது, `எம்.ஜி.ஆருக்கு அருகேதான் அக்கா இருக்க வேண்டும். மக்கள் அதைத்தான் ஏற்பார்கள்’ என முதலில் சொன்னதும் சசிகலாவே.

ஜெ.,வின் அருகிலேயே இருந்து அவருடைய முழு மனதையும் புரிந்தவர் சசிகலாதான். கட்சியில் பெரிய பொறுப்பு அவருக்கு இல்லாவிட்டாலும், கட்சியில் எடுக்கப்பட்ட பெரும்பாலான நடவடிக்கைகள் சசிகலாவாலேயேதான் எடுக்கப்பட்டன. கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்ட பின்னணியில் சசிகலா மட்டுமே இருந்தார். கட்சிக்காரர்கள் அனைவருக்கும் சசிகலாதான் ஜெ.,வின் சாவி என்பது நன்றாகத் தெரியும் என்கிறார்கள்.

சசிகலாவுக்கு ஜெ., கொடுத்திருந்த மறைமுக முக்கியத்துவம் அப்படி. ஒரு நேர்காணலில், ‘என் தோழி சசிகலா மிகவும் தவறாகச் சித்திரிக்கப்பட்டு, தவறாகவே புரிந்து​கொள்ளப்பட்டவர். அவர் எனக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பதாலேயேதான் அவர் மீது விமர்சனங்கள். என்னை என் அம்மாபோல் பார்த்துக்கொண்டவர் சசிகலா’ எனச் சொன்னவர் ஜெயலலிதா.

ஆனாலும், மன்னார்குடி உறவுகளுடன் சேர்ந்து ஆட்சிக்கு எதிரான வேலைகளைச் செய்ததாக, கார்டனை விட்டு அதே சசிகலாவை விரட்டியதடிக்கப்பட்ட கதையையும் யாரும் மறந்துவிடவில்லை. சசியால் மன்னார்குடி உறவுகளுக்குக் கடிவாளம் போட முடியாமல் போய்விடுமோ? என்ற பயத்தை, இறுதி அஞ்சலி நிகழ்வுகளே எடுத்துக்காட்டிவிட்டன.

ஜெயலலிதாவின் தோழி என்ற விதத்தில் சசிகலாவைக் கட்சிக்காரர்கள் ஏற்றுக்​கொண்டாலும், உறவினர்கள் ரீதியாக அதிருப்தி ஒவ்வொரு தொண்டனின் உள்ளத்திலும் கொந்தளிக்கவே செய்கிறது. கட்சியினரின் ஆவேசத்தைப் புரிந்துகொள்கிற நிலையில் மன்னார்குடி உறவினர்கள் இல்லை. அதிகாரிகளை அணி சேர்ப்பதும் கட்சிக்காரர்களை மிரட்டுவதுமாக, அவர்களின் வேலைகளைத் தொடங்கிவிட்டனர்.

மன்னார்குடி உறவுகளைப் பொறுத்தமட்டில், அவர்களை வீழ்த்த யாரும் தேவை இல்லை. அவர்களை அவர்களே வீழ்த்திக்கொள்வார்கள். இது சசிகலாவுக்குத் தெளிவாகவே தெரியும். ஆனால், கட்சியை நடத்த அவருக்கு நம்பிக்கையான ஆட்கள் வேண்டும். அதனால்தான் சர்ச்சைக்கு உரிய உறவுகளை உடனே கார்டன் பக்கம் வரவிடாமல் தடுத்திருக்கிறார்.

ஆனால், உறவுகளின் பிடியில் இருந்து அவர் விலக நினைத்தபோதே அவருக்கான சிக்கல்களும் தொடங்கிவிட்டன. கட்சியின் சட்ட விதிமுறைகளைச் சொல்லி, `நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என சசிகலாவையே மிரட்டுகிற அளவுக்கு உறவினர்கள் சிலரே வேலை பார்க்கிறார்கள். கார்டனை கடிதம் மூலம் மிரட்டுகிற ஒரு முக்கியப் புள்ளி, `கஷ்டப்பட்ட நான் ரோட்டுல நிற்கிறேன். சும்மா நின்னவங்க எல்லாம் உங்ககூட நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறாங்க? என்ற சென்ட்டிமென்ட் மிரட்டல்கள்.

சேகர் ரெட்டி மீதான பிடி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இறுக்கும் என்ற புலனாய்வுத் தகவல்கள். கொங்கு மண்டலத்தில் அணி சேர்க்கும் முயற்சிகள், மீடியாவின் தாக்குதல்கள் என சசிகலா முன்பு நீண்டு கிடக்கும் சவால்கள் அதிகமே! இனி, சசிகலாவால் இத்தனை சவால்களைச் சமாளிக்க முடியுமா?

.

குழுசேர்

கருத்து கணிப்பு

How Is My Site?

View Results

Loading ... Loading ...

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares