ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம்: இந்தியாவுக்கு பாதிப்பில்லை..!

December 18, 2016 6:54 am
ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதம்: இந்தியாவுக்கு பாதிப்பில்லை..!

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் உயர்த்தியதால், இந்தியாவுக்கு குறிப்பிடும்படியான பாதிப்பு இருக்காது என்று, மத்திய அரசின் மூத்த பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசோசேமின் நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய அர்விந்த் சுப்ரமணியன் மேலும் கூறியதாவது: ‘ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வால் மற்ற நாடுகளைவிட இந்தியாவுக்கு குறைந்தளவு பாதிப்பே ஏற்படும். சில நாட்களுக்கு முன்பு, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தது நமக்குச் சாதகமானது. குறைந்த வரி விகிதம் மற்றும் அதிகமான வரி விகிதம் ஆகிய இரண்டையும் சமன்செய்யும்வகையில் ஜி.எஸ்.டி. வரி அமைப்பு இருக்க வேண்டும். எளிதான ஜி.எஸ்.டி. அமைப்புதான் தற்போது பிரதமர் மோடி அறிவித்துள்ள பண மதிப்பிழப்புத் திட்டத்துக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும். கருப்புப் பணத்துக்கு எதிராக அனைத்து அமைப்புகளும் தங்களுக்குள்ளே ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டுமெனில், நிலம் மற்றும் ரியல் எஸ்டேட் ஜி.எஸ்.டி.க்குள் வர வேண்டும்.

பண மதிப்பிழப்பால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பதுதான் இந்தியப் பொருளாதாரத்துக்கு சவாலாக இருக்கும். நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் மொத்தவிலைக் குறியீடு ஆகிய இரண்டும் குறைவாக இருந்துவருகிறது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது. 2016ஆம் ஆண்டின் மிகப்பெரிய சாதனையாக ஆதார், ஜன் தன் யோஜனா, மொபைல் எண்கள் ஆகியவை மிகப்பெரிய அளவுக்கு சென்றுசேர்ந்துள்ளன’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

.

குழுசேர்

கருத்து கணிப்பு

How Is My Site?

View Results

Loading ... Loading ...

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares