டூப் இல்லாமல் ரிஸ்க்கான சண்டை காட்சியில் தல அஜித்! #Thala57 #Ajith

டூப் இல்லாமல் ரிஸ்க்கான சண்டை காட்சியில் தல அஜித்! #Thala57 #Ajith

‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படமாக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது அஜித்-சிவா கூட்டணி பல்கேரியாவில் படத்தை எடுத்து வருவதாக தகவல் வந்துள்ளது.

நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் ‘ஏகே 57’ படத்தில், ஆபத்தான ஸ்டன்ட்களை டூப் ஏதுமின்றி அஜித்தே செய்வது வருகிறாராம். குறிப்பாக தனது ரசிகர்களை கவரும் வகையில், ஒரு முக்கிய காட்சியில் சுமார் 29 அடி உயர மாடியில் இருந்து குதித்து அஜித் அசத்தியதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் அஜித் நடித்துள்ள படங்களிலேயே ‘ஏகே 57’ படமே அதிக பொருட்செலவில் சுமார் ரூ.100 கோடியை தாண்டி உருவாக்கப்பட்டு வருவதாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

எனவே, வழக்கம்போல ‘ஏகே 57’ படத்திலும் அஜித்திற்கு ஒரு மாஸ் தொடக்கம் அமையும் என்பதில் சந்தேகமில்லை. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘ஏகே 57’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், முக்கிய வேடத்தில் அக்‌ஷரா ஹாசனும் நடித்து வருகின்றனர். அஜித்துக்கு வில்லனாக பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ‘ஏகே 57’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குழுசேர்

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares