தனுஷின் கேவலமான இன்னொரு முகத்தை தோலுறித்து காட்டிய சித்தார்த்!

January 28, 2016 12:20 pm
தனுஷின் கேவலமான இன்னொரு முகத்தை தோலுறித்து காட்டிய சித்தார்த்!

திரைப்படங்களில் தனுஷ் பேசும் வசனமும், அதையே நிஜ வாழ்க்கையிலும் தொடரும் தனுஷ். செஞ்சிருவேன்…செஞ்சிருவேன்… என்று படங்களில் பேசும் மாஸ் வசனங்களுக்கு ரசிகர்கள் எவ்வளவு சந்தோஷமாக கைத்தட்டுவார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால் இந்த செஞ்சிருவேன் என்கிற விஷயம் தனுஷின் சொந்த வாழ்க்கையிலும் தொடர்வதுதான் பேரதிர்ச்சியாக இருக்கிறது. காரணம், சில காலங்களாக தனுஷுக்கு நெருகமானவர்களுக்கு நடந்த விபரீதங்கள் மற்றும் இன்னல்கள் தான்.

ஆம், இவருடன் நட்புடன் பழகும் நடிகர்கள் இவர் சொல்வதைத்தான் கேட்கவேண்டும். அப்படி இல்லையெனில் அவர்களிடம் சிரித்து பேசியே அவர்களை ஒரு சர்ச்சையில் சிக்க வைத்து அதை மீடியாக்களுக்கு தீணியாக போட்டுவிட்டு வெளிநாடு பறந்துவிடுவார் தனுஷ். சர்ச்சையில் சிக்கிய நடிகர்கள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தலைமறைவாக ஓடுவது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

சமீபத்தில் சிம்புவும், சில மாதங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் பல வருடங்களுக்கு முன்பு பலர் என தனுஷால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் என்கிறது புள்ளி விவரம். என்னதான் பொது இடத்தில் நாங்கள் நண்பர்கள் தான் என்று சிவகார்த்திகேயன் கூறினாலும் ஊருக்கே தெரியுது அவர்கள் இருவர் நட்பின் அழகு.

அனிருத் தனுஷின் உறவினர் என்றாலும் சிம்புவுடன் அனிருத் பழகியதை ஆரம்பத்தில் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாத தனுஷ்! பிரபல ஹோட்டலில் ஒரு நடிகைக்காக தனுஷும் சிம்புவும் அடித்துக் கொண்டதால் கடும் கோபத்தில் இருந்த தனுஷ்!! செல்வராகவன் – சிம்பு படத்தை டிராப் செய்ய வைத்தார். அனிருத் – சிம்பு நட்பில் பெரிய குண்டை தூக்கி போட்டுவிட்டார். கமல் ரசிகர்கள் என்ற போர்வையில் சிவகார்த்திகேயன் மீது தாக்குதல் என எல்லாவற்றிலும் தனுஷுக்கு தொடர்பு இருக்கிறதாம்.

இதனால்தான் சித்தார்த் அவரின் மனதில் இருந்த கோபத்தை வெளிகாட்டினார்.

சில நாட்களுக்கு முன்பு தனுஷ் ஒரு இன்டர்நேஷனல் படத்தில் நடிப்பதாக அவருடைய டுவிட்டர் பக்கத்தில் அவரே வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்ட சில நொடிகளில் நடிகர் சித்தார்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,

“நாகூர் பிரியாணி உளுந்துர்பேட்டையில இருக்குற ஒரு தெருநாயிக்கு கிடைக்கணுமுன்னு எழுதிருந்தா அத யாராலையும் மாத்த முடியாது. #தமிழ் #தத்துவம்” என தங்லிஷில் கூறியிருந்தார். பின்னர் சித்தார்த்துக்கு வேண்டப்பட்ட நண்பர்கள் இதை பற்றி அவரிடம் கேட்க, அவரோ இவரை பற்றி தான்! என சொல்லியதாக புகைகிறது. சித்தார்த்தின் இந்த திடீர் வசனத்தை படிக்கும் போது, மழை வெள்ளம் என்றாலும், அவர் உடனே பணியில் இறங்கிவிடுவார், யாருக்காவது சூடு கொடுக்கணுமுன்னு நினைத்தால் அதையும் பயமின்றி முதல் ஆளாக செய்வார் என தெரிகிறது. இதை சில விஷமிகள் சித்தார்த்துக்கே எதிராகவும் மாற்றினர்.

.

குழுசேர்

கருத்து கணிப்பு

How Is My Site?

View Results

Loading ... Loading ...

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares