நயனை மறக்கவே முடியல… எப்போதும் அவர் நினைவுகள் வாட்டுகிறது… முதல் காதல் பற்றி பேசி கண் கலங்கும் சிம்பு

November 8, 2016 7:46 am
நயனை மறக்கவே முடியல… எப்போதும் அவர் நினைவுகள் வாட்டுகிறது… முதல் காதல் பற்றி பேசி கண் கலங்கும் சிம்பு

சிம்புவின் காதலை பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. அது சந்து பொந்து என்று ஒரு இடம் விடாமல் அனைத்து இடங்களிலும் பரவி கிடக்கிறது… சிம்பு விஷயத்தில் காதல் என்பது சினிமாவில் வரும் காதலை போன்றுதான். கண்டதும் காதல், பேசியதும் காதல். அந்த வகையில், வல்லவன் படத்தில் நடித்தபோது நயன்தாராவை காதலித்தார். ஆனால் அந்த காதல் எவ்வளவு சீக்கிரத்தில் வந்ததோ அதே வேகத்தில் அதாவது இரண்டு-மூன்று மாதத்திலேயே முறிந்து போனது.

அதேபோன்று தான், வாலு படத்தில் நடித்தபோது ஹன்சிகாவுடன் காதல் வயப்பட்டார். ஆனால் அதுவும் அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே முறிந்து விட்டது. இருப்பினும், பின்னர் அதே வாலு படத்தில் ஹன்சிகாவுடன் நடித்தார் சிம்பு. காதல் முறிவுக்குப்பிறகு அவர் நடிக்க மறுத்தபோதும் பேச்சுவார்த்தை நடத்தி தொடர்ந்து அவரை நடிக்க வைத்தார். சிம்பு – நயன்தாரா இருவரும் பாண்டிராஜின் இது நம்ம ஆளு படத்தில் ஜோடி சேர்ந்ததும் ஆரம்பமானது பிரச்சனை. அதுவரை சிம்புவை காதலித்து வந்த ஹன்சிகா, நான் இனி சிங்கிள் என அறிவித்தார். சிம்புவும், பட்டது போதும் என்கிற தோனியில் ஒரு பிரேக்கப் அறிக்கை வெளியிட்டார். இவர்களின் ‌பிரிவுக்கு காரணம், சிம்பு – நயன்தாரா பாண்டிராஜின் படத்தில் இணைந்து நடிப்பதுதான் என பேசப்பட்டது. இருவரும் மீண்டும் காதலிக்க ஆரம்பித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

காதல் முறிவுக்கு பிறகு நயன்தாரா மற்றும் ஹன்சிகாவை பார்த்தால் ஒரு ஹலோ சொல்வதோடு சரி பேசுவது இல்லை. அதற்கு காரணம் அவர்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை. நான் நயன்தாராவையும், ஹன்சிகாவையும் உயிருக்கு உயிராக காதலித்தேன். அவர்கள் தான் மதம் மாறுவது போன்று எளிதில் மனதை மாற்றிக் கொண்டார்கள். நயன்தாரா, ஹன்சிகா இருவருமே நான் அவர்கள் மீது வைத்திருந்த உண்மை காதலை புரிந்து கொள்ளவில்லை.

இரு காதல் தோல்விகள் சிம்புவின் கேரக்டேரில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிம்புவின் பெற்றோர் அவருக்கு பெண் பார்த்து வருகிறார்களாம். விரைவில் திருமணம் நடத்த தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். ஆனால் யாரும் பெண்குடுக்க முன்வரவில்லையாம். அதற்கு காரணம் சிம்புவின் காதல் லீலைகள் . நயன்தாராவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் உலா வருவதும் இதற்கு காரணமாக தெரிகிறது. ஆனால் சிம்புவின் அம்மா மனம் தளராமல் பெண் தேடல் பணியை செய்து வருகிறாராம்.

simbu-nayan

கடந்த சில மாதங்களாக சிம்புவின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாம். சிம்பு இப்போது மிகவும் மாறி விட்டார்! படபிடிப்புகளுக்கு அரைமணி நேரம் முன்பே சென்று விடுகிறார். கேரவனில் போய் உட்காருவது இல்லை. உதவி இயக்குனர் போல இயக்குனர்களுக்கு உதவி செய்கிறார்.உணவு வீட்டில் இருந்து அம்மா கொடுத்து விடுகிறார்.

சிம்பு தன் அப்பாவிடமும் அவ்வப்போது சாவகாசமாக உட்கார்ந்து சில பகிர்வுகளை செய்துவருகிறாராம். குடும்பத்தினரோடும் நண்பர்களோடும் அதிக நேரம் செலவிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக சிம்பு கூறுகிறார். நண்பர்களிடம் முதல் காதல் பற்றி பேசி கண் கலங்குகிறார் என்கிறார்கள். நயனை மறக்கவே முடியல.  எப்போதும் அவர் நினைவுகள் வாட்டுகிறது என்று கூறி வருத்தப் படுகிறார் சிம்பு! பாவம் தானே!

சிம்புவுக்கு தற்போது ஆன்மிகத்திலும் ஈடுபாடு அதிகரித்து விட்டது. அப்பப்போ ஞானிகளை சென்று சந்தித்து வருகிறாராம். தன்னால் இயன்ற உதவிகளை பிறருக்கு செய்து வருவதாக தொலைக்காட்சியை நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது சிம்பு கூறினார். ஆதரவற்ற ஒரு பெண் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் குடுத்து உதவினராம் சிம்பு . சிகிச்சைக்கு பின் அந்த குழந்தை சிம்புவை சந்திக்க வந்ததாம். அப்போது திடீரென அந்த குழந்தை சிம்புவின் காலில் விழுந்து விட்டதாம் , என்ன செய்வதென்றே புரியாமல் நின்றுவிட்டராம் சிம்பு. அந்த நொடியில் கடுவுளை உணர்ந்தேன் என்று உணர்ச்சிவசமாக பேசியிருந்தார் சிம்பு.

காதல் நாயகனாக சுற்றி வந்த சிம்புவிடம் இந்த மாற்றம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.” நேற்று இல்லாத மாற்றம் என்னது” ன்னு குழம்பி போயிருக்காங்க சிம்புவின் வட்டாரங்கள்.

.

குழுசேர்

கருத்து கணிப்பு

How Is My Site?

View Results

Loading ... Loading ...

முகநூல்

© 2017, S. G. S. Creative Media

Shares